விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் முடிவடைந்ததும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனதும் புலனாய்வுப்பிரிவுத் தலைவர் பொட்டம்மானினதும் மரணச்சான்றிதழ்களை இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரியிருந்தது.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் இவ்விருவரும் தொடர்புபட்டிருந்ததால் அவ்வழக்கு விசாரணைகளுக்கு அவசியமானவை என இந்தியத் தரப்பால் வினவப்பட்டிருந்தது.
இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட இவ்வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு சட்டமா அதிபர் திணைக்களத்திடமே உள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அறிந்து கொள்ள மொகான் பீரிசுடன் தொடர்பு கொள்ள முயன்ற போதும் அம்முயற்சி கைகூடவில்லை. இதேவேளை, முல்லைத் தீவு நந்திக்கடல் பிரதேசத்தில் மே17 ஆம் திகதி நடைபெற்ற இறுதி மோதலில் புலிகளின் புலாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான், கடற்படைத் தளபதி சூசையுடன் தப்பிச் சென்று விட்டார் என்ற சந்தேகம் இன்னமும் நிலவுவதாலேயே இம்மரணச்சான்றிதழ்களை வழங்குவதில் இலங்கை தயக்கம் காட்டி வருவதாக வேறோரு வட்டாரம் தெரிவிக்கிறது.
இறுதிப் போர் நடைபெற்ற நாளொன்றில் சூசையின் மனைவியும் மகளும் அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்ற போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment