கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஊடுருவியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகள் கட்டளைக்காக காத்திருப்பதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. உரிய இலக்குகள் மற்றும் ஆலோசனைக்காக புலிகள் காத்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் குறித்த தற்கொலைப் போராளிகள் மறைந்திருப்பதாகவும், சனநடமாட்டமிக்க பகுதிகளில் இவ்வாறு பதுங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு எத்தனை தற்கொலைப் போராளிகள் பதுங்கியுள்ளனர் என்பது குறித்த சரியான தகவல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது எனக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் சுமார் 20 தற்கொலை அங்கிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
தற்கொலைப் போராட்டங்களை முன்னெடுத்த சிரேஸ்ட தலைவர்கள் உள்ளிட்ட 100 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Sunday, September 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment