தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை நேற்று இலங்கை நீதிமன்றம் ஒன்று நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுதலை செய்துள்ளது. சுமார் 25 லட்சம் ரூபா பிணையில் வெளிவந்த இருவரும் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இன்டர் கூலர் சொகுசு வாகனத்திலேறிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் அதிர்வு இணையத்திற்குத் தெரிவித்தனர்.
கடந்த 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர், அரச தொலைக் காட்சியில் தோன்றி விடுதலைப் புலிகளே மக்களைத் தடுத்துவைத்திருந்தனர் எனவும் அவர்கள் மக்களைக் கொலைசெய்ததாகவும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அவர்கள் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறு கூறியதாக சில ஊடகங்கள் கருத்துவெளியிட்டு தமிழ் மக்களை சாந்தப்படுத்தியது.
இன்டர் கூலர் போன்ற சொகுசு வாகனங்கள் சுமார் 1கோடி ரூபாய் பெறுமதியானவை, அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் பயணிக்கும் இந்த வாகனம் யாருக்குச் சொந்தமானது என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சொகுசு வாகனத்தை அனுப்பியது யார், மற்றும் பல விடுதலைப் புலி முக்கிய உறுப்பினர்கள் தடுப்புக்காவலில் இருக்கின்றபோது இவர்கள் மட்டும் ஏன் விடுதலையானார்கள் என்பதில் பல சிக்கலான சந்தேகங்கள் நிலவுகிறது.
அரசுடன் இணைந்து இவர்கள் செயல்ப்படவுள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ள நிலையில் பொறுத்திருந்துதான் நாம் பார்க்கவேண்டும்.
Saturday, September 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment