Thursday, March 26, 2009

பிரிந்து போகும் உரிமை ஓர் (தமிழ்) இனத்திற்க்கு உள்ளதா?

சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள "தேசிய இனப்பிரச்சனை குறித்து" என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார்.

1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்டும்.

2) பிரிவினை கோரும் இனமக்கள் தொடர்ச்சியான நிலப்பரப்பில் இருக்கவேண்டும்.

3) மொழி மட்டுமே ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஜாதி, மதம் போன்றவற்றால் ஓர் இனத்தின் அடையாளப்படுத்த முடியாது.

ஜோசப் ஸ்டாலின் வரையறுத்துள்ள இந்த மூன்று காரணிகளும் "ஈழ்த்தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவை"

ஏனென்றால், இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்றுவரை சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஈழத்தமிழர்கள் ஆட்பட்டு வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதாகும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்தியதன் மூலம் இலங்கை அரசு அத்துமீறியது. அடக்குமுறையை கையாண்டுள்ளது. (பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் இதைத்தான் செய்தது).

இலங்கை ராணுவம், ராணுவத்தின் துணைப்படைகள், மத்திய காவல்துறை ஆகிய படைப்பிரிவுகளில் மருந்துக்கும்கூட ஒரு தமிழர் இல்லை.(ஹிட்லரின் நாஜிப்படையில் ஒரு யூதன்கூட இல்லை). இந்த அளவிற்கு அவநம்பிக்கையும், பிளவும் உறுதியாகக் கெட்டிப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் எவ்வாறு கூடிவாழ முடியும்?

தமிழ்ப் பெண்களைத் திட்டமிட்டு, கூட்டுப் பாலியல் அத்துமீறல்களுக்கு உட்படுத்துவது சிங்கள ராணுவத்திற்கு அன்றாட கடமையாக வலியுறுத்த்ப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள்கூட சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார்கள் என்ற செய்தி இடியாய் இறங்குகிறது. "உங்கள் வயிற்றில் புலி அல்ல, சிங்கள சிங்கம்தான் வளரவேண்டும்" என்று சொல்லி சொல்லி தமிழ் பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை ஒழுக்கமில்லாத, கோழைத்தனமான சிங்கள ராணுவம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது.(கொடுங்கோலன் ஹிட்லர் படைகள்கூட இந்த ஈனச் செயலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை).

தமிழர்களின் அடையாளங்களையும், பண்பாட்டு சின்னங்களையும் சிதைப்பதை சிங்கள பேரினவாதம் திட்டமிட்டு நடத்தி வருகிறது.(யாழ்பாணத்தில் இருந்த மிகப்பெரிய நூலகத்தை எரித்து சாம்பலாக்கியது மற்றும் பாடசாலைகள் எரிக்கப்பட்டது). இதனால் ஒரு தலைமுறை தமிழ்க் குழந்தைகள் எழுத்தறிவற்றவர்களாக ஆக்கப்பட்டது.

இலங்கையில் தமிழினத்தை முற்றிலுமாகத் துடைத்தெறியும் நோக்கத்தை ராச்பக்சே-வின் பாசிச இனவெறி அரசு தடையேதுமில்லாமல் அரங்கேற்றி வருகிறது. விடுதலைப் புலிகளை அழித்த பின்பு மீதமுள்ள தமிழர்களைப் பாதுகாப்பு முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் நிரந்தரமாய் அடைத்து வைக்க வெட்டவெளி மைதானங்களை தற்போது தாயர் நிலையில் வைத்துள்ளது ராசபக்சே-வின் கொலைவெறி பிடித்த சிங்கள அரசும், ஒழுக்கமில்லாத சிங்கள ராணுவமும்.

உலக சரித்திரத்தில் எந்த இனமும் இந்த அளவு ஆதரவற்ற, பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டதில்லை.

எத்தனை எத்தனை கொலைகள், கற்பழிப்புகள், சித்ரவதைகள், ஓலங்கள் மற்றும் அலங்கோலங்களைக் கொண்டது ஈழ மண். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என்று ஒருவரையாவது விட்டதுண்டா?.

மனிதன் மிருகங்களோடுகூட வாழ்ந்துவிடலாம். இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ள நிலையில் சிங்கள் அரக்கர்களோடு எப்படி ஒன்றாக வாழமுடியும்?...

இவ்வளவு தூரத்திற்கு வந்த பின்பு, தனி ஈழம்தான் தீர்வு என்று அரசியல் தலைவர்களும், மக்களும் கூறிவருகின்றனர். (இலங்கைத் தமிழர்கள் பல தேர்தல்களிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இக்க்ருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்).

எனவே இலங்கையில் இருந்து பிரிந்து போகும் உரிமை தமிழர்களுக்கு நூறு விழுக்காடு உண்டு. அரசியல் தீர்வு என்பது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்காது. தனி நாடு ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரத்தையும், அமைதியையும் பெற்று தரும்.

ஆய்வு:முத்தமிழ் வேந்தன்(சென்னை)

Wednesday, March 18, 2009

ஐ.நா. முன்றலில் -சாவிலும் எழுவோம்-

ஐ.நா. முன்றலில் -சாவிலும் எழுவோம்-


பேரணியைக் குழப்ப முயன்று தோற்றுப் போன ஸ்ரீலங்கா அரசாங்கம்

கடந்த திங்கட்கிழமை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் புலம்பெயர் மக்களால் நடத்தப்பட்ட -சாவிலும் எழுவோம் - கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பங்கு கொண்டு தமது உணர்வலைகளை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வரும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டும் வகையில் இப் போராட்டம் அமைந்திருந்தது.
எனினும், இந்த உணர்வெழுச்சிப் போராட்டத்தைக் குழப்பும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட சில தமிழ் புல்லுருவிகள் குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட முனைந்த போதும் அவை யாவும் தோல்வியில் முடிவடைந்தது.
இந் நிகழ்வின் போது, ஐ.நா. முன்றலில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

Sunday, March 15, 2009

தமிழின படுகொலையின் மற்றுமொரு வடிவம் ; கருவில் இருக்கும் சிசுவை தாக்கிய எறிகணை

சிறிலங்காவின் இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்களும் பலியாகி வருகின்றனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை படையினரின் எறிகணையில் நான்கு கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கடந்த 2ம் திகதி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் நேற்று சனிக்கிழமை பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தையில் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தில் இருந்த எறிகணைத் துண்டு உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. தேராவில் விசுவமடு பகுதியில் வசித்துவந்த 24 வயதான பிரசாத் சிவதர்சினி என்பவரே படுகாயமடைந்த நிலையில் குழந்தையைப் பெற்றுள்ளார். இதேவேளை, கடும் எறிகணைத் தாக்குதல் அதிர்ச்சியில் ஆறு மாதக் கருவொன்று வயிற்றிலேயே இறந்துள்ளது. 28 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வயிற்றில் இருந்து குழந்தை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டபோதும், தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Thursday, March 12, 2009

தமிழர்கள் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அங்குள்ள தமிழர்கள் கருதும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் -சிவ்சங்கர் மேனன்


இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக மட்டுமே இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹலறி கிளிண்டன் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் கடந்த நான்கு நாட்களாக விவாதித்தப் பிறகு, இந்தக் கருத்தைச் ஊடகவியலாளர்களிடம் அவர் வெளியிட்டிருக்கிறார்.
இலங்கை இனப் பிரச்சினையைப் பொறுத்தவரை இந்தியா, அமெரிக்க ஆகிய இரு அரசுகளின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்கிறது. முதல் கட்டமாக இலங்கையில் போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து அமைதியாக வெளியேற இசைவளிக்கப்பட வேண்டும்.
இலங்கையின் வடக்கு பகுதியில் அனைத்தும் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு, அந்த பகுதி மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதும் தேவையாகும்.
இந்த இலக்குகளை எட்ட அங்குள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவது முக்கியமாகும். தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அங்குள்ள தமிழர்கள் கருதும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அவ்வாறு செய்யாவிட்டால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தமிழ் மக்கள் கருதுவார்கள். பாதுகாப்பான இடம் தேடி நகர்வார்கள். அதன் பயனாக மீண்டும் போர் ஏற்படும் என்று சிவசங்கர மேனன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரால், அங்குள்ள மக்களின் மனித நிலை மோசமடைந்திருக்கிறது என்ற கோணத்தில் மட்டுமின்றி, போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீள்கட்டுமானம் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டியது தேவையாகும். இது குறித்த இந்தியாவின் கருத்தை அமெரிக்காவும் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றும் சிவசங்கர மேனன் தெரிவித்தார்.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறது. போரில் காயமடைந்த மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 56 பேர் கொண்ட மருத்துவக் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த குழுவினர் புல்மோட்டை என்ற இடத்தில் மருத்துவமனை அமைத்து காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவ சிசிக்சை வழங்குவார்கள் என்றும் சிவசங்கர மேனன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பயணத்தை இன்று வியாழக்கிழமை முடித்துக்கொண்ட சிவ்சங்கர் மேனன் நாளை காலை இந்தியா திரும்புகிறார்.

Wednesday, March 11, 2009

பிரித்தானியாவில் இருந்து ஈழ தமிழர்களுகாக ஒப்பரேஷன் "வணங்கா மண்"

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் "வணங்கா மண்" எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.
இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் "வணங்கா மண்" என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் தமிழ் மக்களிடம் கோரி நிற்கின்றனர்.
பிரித்தானியாவின் பல பாகங்களில் உணவு சேமிப்பு நிலையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளது. இங்கு உலர் உணவுப்பொருட்களை மக்கள் சென்று வழங்கமுடியும். உடைகள் மற்றும் இலங்கைத் தயாரிப்பான உணவு வகைகளை தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலை நிவாரண கப்பல் என்று கூறாது "வணங்கா மண்" என பெயரிட்டதன் காரணம், உலகநாடுகளால் புறக்கணிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் கொடூரமான எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதலுக்கு உள்ளாகி, மிகமோசமான உணவு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உலகில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தும், சிங்கள இனவாதிகளுக்கு தலைவணங்காது நிற்கும் எம் தமிழ் மக்களுக்காக எம்மவர்களால் அனுப்பப்படும் கப்பல் என்பதாலாகும்.
புலம் பெயர் வாழ் தமிழர்களே! விரைந்து செயல்பட்டு உணவுகளை வழங்குங்கள். இந்த கப்பலை வெற்றியாக முல்லை துறைமுகத்திற்கு கொண்டுசெல்ல ஏற்பாட்டாளர்களோடு தோளோடு தோள் நின்று உதவுங்கள், என நாம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.
இச் சந்தர்ப்பத்தை தவறவிடின் இனி எச் சந்தர்ப்பத்தில் நாம் வன்னி மக்களை காக்கப் போகிறோம்...!
"வணங்கா மண்" கப்பல் ஒரு வீரப்பயணம்.

58வது படைப்பிரிவின் 3 கொம்பனிகள் முற்றாக அழிப்பு

விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றில் 500-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலைக்கு தெற்கே அமைந்துள்ள தேவிபுரத்தினுள் ஊடறுப்புத் தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் சிறீலங்காப் படையினருக்கு பலத்த ஆழணி உயிரிழப்புகளை ஏற்பட்டுத்தியுள்ளனர்.விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 58வது படைப்பிரிவின் 3 கொம்பனிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாள் நடந்த ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.ஊடறுப்புப் தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் சிறீலங்காப் படையினரின் படைக் கருவிகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறீலங்காப் படையினரின் படைக்கருவிகளை பயன்படுத்தி கடந்த இரு நாட்களும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி, பல சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ந தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் கடந்த திங்கட்கிழமை இரவு தளம் திரும்பியுள்ளன.

விசுவமடுவில் வாங்கி கட்டிய சிங்கள இராணுவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.
இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாவது:
விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்டிலறி பீரங்கித் தளத்தை நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.
இத்தாக்குதலில் சிறிலங்கா படையினர் தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர் என வன்னி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஆறு ஆட்டிலறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும், கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும், ஆட்டிலறித் தளத்தில் களஞ்சியப்படுத்தியிருந்த 1000 ற்கும் அதிகமான எறிகணைகளை சிறீலங்காப் படையினர் இலக்குகளை நோக்கி ஏவியுள்ளனர். நேற்று நண்பகல் வரை இப்பகுதியில் நிலைகொண்ட விடுதலைப் புலிகள், எறிகணைகள் தீரும் வரை எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, குறித்த 6 ஆட்டிலறிகளையும் தகர்த்துவிட்டு, எந்தவொரு உயிரிழப்புகளும் இன்றி மீண்டும் தளம் திரும்பியுள்ளனர்.
இவர்கள் ஏவிய எறிகணைகளே சிறீலங்காப் படையினரின் இலங்குகளிலும் தென்மராட்சிப் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. இவ் எறிகணைத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை அடுத்தே சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது கடுமையாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 129 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.வன்னி நிலப்பரப்பில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளால் கருப்பட்டமுறிப்பு, இரணைமடு, ஒட்டிசுட்டான், குமிழமுனை, மற்றும் மூங்கிலாறு பகுதிகளிலேயே 20 ஆட்டிலறிகள் தகர்கப்பட்டுள்ளன. 3 ஆட்டிலறிகள் கடுமையாகத் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் படையினருக்கான விநியோக வாகனங்களும் பலவும் தாக்கி அழிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Tuesday, March 10, 2009

முகமாலை, கிளாலி, பளை நோக்கி விடுதலைப்புலிகள் எறிகணை வீச்சு

முகமாலை, கிளாலி, பளை ஆகிய பகுதிகளை நோக்கி தமிழீழ விடுதலைப்புலிகள் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அகோர எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளதாக தென்மராட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் கிளாலி, விடத்தற்பளை, உசன் பகுதி மக்களிடையே பெரும் பதற்ற நிலை காணப்படுவதாகவும் ஏ9 வீதியை இலக்கு வைத்தே இந்த எறிகணை வீச்சு இடம்பெற்றதாகவும் அறிய வருகிறது.
இச் சம்பவத்தில் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏதும் ஏற்படாத போதும் ஏ9 வீதியில் இராணுவத்தின் வாகனத் தொடரணி பயணித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இச் சம்பவத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து எதுவும் தெரியவரவில்லை.

Monday, March 9, 2009

கேட்கிறவன் கேனை பயலாக இருந்தால் எருமை மாடும் ஏரோ பிலேன் ஓடுமாம்

தமிழகத்தில் நாடக மேடைகள் போடப்படுகின்றன, நடிப்பதற்கு ஆயத்தமாகின்றனர் அரசியல்வாதிகள். இந் நாடகத்தில் பிரசார பொருளாக எடுத்திருக்கும் தலைப்பு ஈழத்தமிழர் பிரச்சினை. முக்கிய கதாபாத்திரங்களாக கருணாநிதி ஐயாவும் ஜெயலலிதா அம்மாவும்.

வழமையாக இவர்களின் நாடகங்களை பார்த்து இரசித்து வந்த தமிழ்நாட்டு மக்கள் இனியும் இரசிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இக் கதா பாத்திரத்தை எடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இவர்களின் ஒரே நோக்கம் நாடகம் வெற்றி பெற்றால் போதும் என்பதே. இது வரை ஏமாந்து விட்ட தமிழ்நாட்டு மக்கள் இனியும் ஏமாறுவார்களா?

ஈழபிரச்சினை தொடர்பில் தமிழக மக்கள் கடுமையான ஆதரவு நிலையை கொண்டிருக்கும் சந்தர்ப்பதை பயன்படுத்தி ஈழ தமிழர் பிரச்சினை குறித்து பெரிதளவில் இதுவரை அலட்டிக் கொள்ளாத ஜெயலலிதா அம்மையார் தனது சுயலாப அரசியலுக்காக இன்று மேற்கொண்ட உண்ணாவிரத நாடகத்தில் சுய நிர்ணய அதிகாரம் பெற்ற 'தமிழர் நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என கூறியிருக்கிறார்.

கருணாநிதி ஐயா அவர்களும் இதைதான் முன்வைப்பார், ஆனால் எந்த ரூபத்தில் முன்வைப்பார் என்பதை பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும்.

வழமையாக தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக மக்களை ஏமாத்தி வாக்கு கேட்கும் பொருட்கள் இலவச டிவி, இலவச சேலை தான்.

Sunday, March 8, 2009

பிள்ளையானின் கிழக்கு மாகாண ஆட்சி நாடகம் முடிவுக்கு வருகிறது

பிள்ளையான் குழுவிடமிருந்து ஸ்ரீ லங்கா அரசு ஆயுத களைவினை மேற்கொண்டதன் மூலம் கருணாவின் கை ஓங்கி உள்ளது. இனி பிள்ளையான் குழுவினரின் கதி அதோ கதி தான்.

மீண்டும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் கைகளை பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கருணா தனது சகாக்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்து உள்ளமை தெரிந்ததே.

Saturday, March 7, 2009

சாலை பகுதியை ஊடறுத்து தாக்கிய விடுதலைப் புலிகள்:ஒரு டிவிசன் படையினர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலையின் தென்பகுதியில் கடுமையான சமர் நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் அணிகள் அலை அலையாக ஊடறுத்து தாக்குதலை நடத்தியுள்ளர்.
55 ஆவது படையணியின் பின்னணி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலைகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சாலைப் பகுதியில் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் இணைப்பை ஏற்படுத்தியிருந்த புள்ளியை மையப்படுத்தியே விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடைபெற்றது.
நம்பத்தகுந்த தகவலின் படி ஒருடிவிசன் படையினர் பலியானதாக உறிதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன...பெரும்பாலும் தற்போது செய்திகளை விடுதலைப் புலிகள் ஊடகங்களுக்கு தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday, March 4, 2009

நியாயமான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட்டால், புலிகளை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியும்-அருளர்:

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என பிரபல சர்வதேச ஹிப்பொப் பாடகி எம்.ஐ.ஏ(மாதங்கி அருள்பிரகாசம்) வின் தந்தை அருளர் எனப்படும் அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். 30 ஆண்டு காலமாக தொடரும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சுயாதீன மத்தியஸ்தராக கடமையாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தொடரும் யுத்த நிலைமைகளின் காரணமாகவே தாம் புலம்பெயர்ந்து வாழ நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் தற்போது இராணுவப் பலம் அதிகளவில் காணப்பட்ட போதிலும், தற்போதைய யுத்த அணுகுமுறையின் மூலம் ஓருபோதும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி அரசாங்கம் முக்கிய தமிழ் தரப்புக்களை ஜனநாயக அரசியலில் இணைத்துக் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முனையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாறாக, தம்முடன் நட்புறவு பேணிவரும் சில தமிழ் அரசியல் கட்சிகளை மட்டும் சமாதான முயற்சிகளில் இணைத்துக் கொண்டுள்ளதாகவும், இதனை ஓர் வெற்றிகரமான முயற்சியாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழம் தமிழர்களுக்கு உரித்தானது, சிங்கள நாடு சிங்களவர்களுக்கு உரித்தானது இலங்கை முழு இலங்கையர்களுக்கும் உரித்தானது என்ற கொள்கையின் அடிப்படையில் தீர்வுத் திட்ட முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அருளர் அருட்பிரகாசம் தெரிவித்துள்ளார். இந்திய உதவியுடன் வன்னிப் பெருநிலப் பரப்பில் புலிகள் முற்றாக விரட்டியடிக்கப்பட்ட போதிலும் கெரில்லா போராட்டத்தை முழுமையாக தடுத்து நிறுத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் சில ஆண்டுகளுக்கு போராட்டத்தை தொடரக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழர் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையிலான நியாயமான தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் பிரபாகரனை இணக்கம் காண வைக்க தம்மால் முடியும் என அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். நியாயமான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட்டால், தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்ய எம்.ஐ.ஏ விருப்பம் தெரிவித்துள்ளார்.அருளர் எனப்படும் அருள்பிரகாசம் 1980 களில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபாட்டைக் கொண்டிருந்தவர். ஈரோஸ் எனப்படும் ஈழரவ் ஜனநாயக முன்னணியில் இணைந்து செயற்பட்டவர். இவர் லங்காராணி அருளர் எனவும் அழைக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட்லர் காலத்தில்கூட நடக்காத வெறியாட்டம் இலங்கையில்

'அப்பாவையும் அக்கம் பக்க உறவுகளையும் காவு வாங்கிய சிங்கள ராணு வத்துக்கு எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பாது காப்பு வளையம் என்கிற பெயரில் என் போன்றவர்களைப் பாடாகப் படுத்துகிறார்கள் ராணுவத்தினர்.
கொஞ்சம் அழகாகப் பிறந்த பாவத் துக்காக,
நினைக்கும்போதெல்லாம் குதறப்பட்ட என் தோழி, இப்போது சித்தப்பிரமை பிடித்துக் கிடக்கிறாள்.
ஆனாலும், ஆடை கிழிக்கும் வேலை மிச்சமென நினைத்து பிரமை பிடித்தவளையும் பிறாண் டுகிறது ராணுவம்!''
-மனிதநேயமுள்ள மருத்துவர் ஒருவர் மூலமாக வெடித் திருக்கும் ஈழப்பெண்ணின்
குரல், நெஞ்சையே நொறுக்கிப் போடுகிறது. ராணுவத்தை நம்பிப்போன அப்பாவித் தமிழ் மக்களின் மொத்த நிலைமையும் விவரமாகச் சொல்லி அதிர வைக்கிறார்கள் கொழும்பில் இருக்கும் பத்திரிகையாளர் சிலர்.
''புலிகளுடனான போரை நடத்தும்போதெல்லாம் ராணுவம் போடும் வெறியாட்டங்களைத் தமிழ் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் ராணுவத் தரப்பினர், எவ்வளவோ வற்புறுத்தியும் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட்ட வளையப் பகுதிக்குச் செல்லவில்லை. இந்தக் கடுப்பில் கொத்து குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசி, மக்களை உயிர் பயத்தில் ஓடவைத்தது ராணுவம். இதனால் வேறு வழியில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தின் முகாம்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சோதனை முடிந்து அனுப்பப்படுபவர்களை பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று பிரிக்கிறார்கள். ஆண்களை யும், பெண்களையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக மாறிக்கிடக்கும் தமிழ் தலைவர்கள் சிலருடைய ஆதரவாளர்கள் விசாரிக்கிறார்கள். சந்தேகப்படும்படி அவர்கள் யாரையெல்லாம் குறித்துத் காட்டுகிறார்களோ... அவர்களுக்கெல்லாம் அடுத்த சில நிமிடங் களிலேயே முடிவு கட்டுகிறது ராணுவம்.
மக்களோடு மக்களாகப் புலிகள் ஊடுருவி கிளிநொச்சி, யாழ்ப்பாணப் பகுதிகளில் மரப்பொந்து களிலும் மண்ணுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் மூலமாக ராணுவம் மற்றும் சிங்கள அரசில் இருக்கும் முக்கிய ஆட்களைக் கொன்றுவிடுவார்களோ என்கிற அச்சத்தில்தான் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைவர்களை இந்த ஆராய்ச்சி வேலையில் இறக்கியிருக்கிறது ராணுவத் தரப்பு. இளைஞர்கள் எந்த விசாரணையும் இன்றியே ரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். இளம்பெண்களின் நிலையைச் சொல்ல வேண்டியதே இல்லை. ராணுவத்தின் வல்லுறவுக்கு உடன்படாமல் வீம்பு காட்டும் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்நடத்தப்படுகிறது. அவர்களை சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்காமல் நடத்தப்படும் சித்ரவதைகளை ராணுவத்தில் இருக்கும் ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளே மீடியாக்களிடம் சொல்லி வருந்தி இருக்கிறார்கள்.
இதற்கிடையில், தமிழ்ப் பெண்களை வற்புறுத்திப் புணர்வதைக்கூட இரக்கமேயில்லாமல் வீடியோ பதிவும் செய்கிறார்கள். இத்தகைய வீடியோ பதிவுகள் யாருக்கு எதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கிறது. ராணுவ வீரர்கள் செய் வதைக் காட்டிலும், தமிழ்ப் பெண் களைப் பெரிய அளவில் சித்ரவதை செய்வது ராணுவத்தின் உளவுத் துறையில் இருக்கும் சிலர்தான்.
அவர்கள் தங்கள் முகாம்களில் எடுபிடி வேலைகள் செய்யவும், விரும்பும்போதெல்லாம் இச்சை களைத் தீர்த்துக்கொள்ளவும் இளம்பெண்களைப் பயன் படுத்துகிறார்கள். உளவுத் துறையின் வெறியாட்டத்துக்கு இரையாகி, பலியான பெண்களில் பலரும் எரிக்கப்பட்டு விடுகிறார்கள்.
உலக நாடுகளிடம், 'எங்களை நம்பி வந்த மக்களுக்குத் தரமான உணவும் மருந்துப் பொருட்களும் வழங்குகிறோம்!' என்று சொல்லும் சிங்கள அதிகாரிகள், உண்மையில் வெறித்தனத்தைத் தவிர, வேறெதையும் தமிழ் மக்களிடம் காட்டவில்லை. இத்தகைய கொடுமைகளை ராணுவம் செய்வது பற்றி சிங்கள மக்களுக்குக்கூடத் தெரியாது. மருத்துவர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் மூலமாக வெளிவந்திருக்கும் இத்தகைய கொடூரங்கள், இரக்கமுள்ள சிங்கள மக்களிடமும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக் கிறது!'' என்கிற கொழும்பு பத்திரிகையாளர்கள்,
''தற்காலிக விடுப்பிலிருக்கும் ராணுவ வீரர்கள், இளம் பெண்களின் கற்பைச் சூறையாடி, அவர்களின் உறுப்புகளை அறுத்து எறியும் அவலமும் நடக்கிறது. வவுனியா மற்றும் விசுவமடு பகுதிகளில் இருக்கும் இடைத் தங்கல் முகாம்களில் தமிழ்ப் பெண்கள் எந்தளவுக்கு சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்று நேர்மையான ராணுவ அதிகாரிகளே எங்களிடம் சொல்கிறார்கள். ஐ.நா-வின் பிரதிநிதியாக அந்த இடைத் தங்கல் முகாம்களுக்கு வந்த ஜான் கோல்ம்ஸின் கவனத்துக்கு அத்தகைய கொடூரங்கள் கொண்டு செல்லப்பட்டும், இலங்கையின் நிவாரண அமைச்சரான ரிஷாட், அதை திசைதிருப்பி, மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மறைத்துவிட்டார்...'' என்றார்கள்.
இதற்கிடையில், இந்திய பிரதமருக்கு ஈழப்பெண்களின் பரிதாபகரமான நிலை குறித்து தமிழ் தேசிய கூட்ட மைப்பைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் அவசரக் கடிதம் எழுதி யிருக்கிறார். அதில், ''வவுனியா மருத்துவமனையில் தமிழ் கர்ப்பிணிகளை வற்புறுத்திக் கருவைக் கலைக்கிறார்கள். இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றச் சொல்லி மருத்து வர்களையும் ராணுவம் மிரட்டுகிறது. மொத்தத்தில், தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து ராணுவம் நடத்தும் வெறியாட்டம், ஹிட்லர் காலத்தில்கூட நடக்காதது!'' என்று சொல்லவொண்ணா வேதனையோடு கலங்கி யிருக்கிறார்.
இறுதி சவம் விழுவதற்குள்ளாவது உலகத்தின் இரக்கப்பார்வை ஈழத்தின் பக்கம் விழுமா?

தவிப்பில் தமிழினம்....சுகபோகத்தில் தமிழின துரோகிகள்

இன்று தமிழர்கள் முழுமையான மொழி சுதந்திரம், முழுமையான நாட்டு சுதந்திரம் இல்லாமல் வாழ்கின்றார்கள். இதை சொன்னாலும் விளங்கிக் கொள்ள கூடிய நிலையிலும் அவர்கள் இல்லை.
காரணம் நமது துடிப்பான தலைமைகள் கூட சுகபோகத்திற்கு அடிமை பட்டு சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.
இப்படி 25 விகிதமானோர்கள் சுகபோகமாகத்தில் தன்னை மறந்து வாழ்ந்து கொண்டிருக்க 75 விகிதமானோர் வசதிகளற்ற சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் குடிசையிலும் வீதியோரங்களிலும் மர நிழல்களிலும் வாழ்வதை என்னவென்பது? வுpழித்தெழு தமிழா! வுpழித்தெழு! நீ தூங்கியது போதும். இருக்கும் எச்ச சொச்சங்களும் ஒன்றொன்றாக உன்னை விட்டுப் போய் கொண்டு இருக்கிறது. சேரன், சோழன், பாண்டியன் என்ற மன்னர்கள் வாழ்ந்த காலம் எப்போது? அவர்கள் வீரத்தோடு வாழ்ந்தது உண்மையா அவர்கள் தமிழ் மொழியை வளர்த்தவர்களா என்று நம் வரலாறு கூட கேள்விக்கிடமாக போகின்றது. அவர்கள் தமிழோடும் வீரத்தோடும் வாழ்ந்திருந்தது உண்மையானால் இன்று இவை அழிந்து கொண்டிருப்பது கண்டு துடித்து எழாமல் இருப்பது எப்படி? இன்று தமிழ் மொழி வீடுகளில் சுத்தமாக பாவனையற்று போய் கொண்டிருக்கிறது. பலர் பேசுவது தமிழ் மொழியா என்று யோசிக்கும் அளவுக்கு ஆங்கிலம் கலந்து தமிழ் வீழ்ந்நு கொண்டிருக்கின்றது. சாதாரண பாமரனும் தன் உண்ணும் சாதத்தை கூட ரைஸ் என்றும் மீல்ஸ் என்றும் கூறும் அளவுக்கு ஆங்கிலழ் எங்கும் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகி விட்டது. ராமர் அணை என்பது தொப்புள் கொடி உறவாக ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வரை கட்டப்பட்டது என்பது வரலாற்று உண்மை. ஆனால் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தில் அந்த உறவும் பொய்யாகின்றது. இராமன் கதை கூட கற்பனை என்றும், இராமர் பாத்திரமும் கற்பனை என்றும் ஒரு தமிழர் தலைவராலேயே மறுப்பு கூறப்படுகின்றது. அதாவது இராமர் வழிபாடு, அனுமன் வழிபாடு எல்லாம் ஏமாற்று வணக்கங்களாக சித்தரிக்கப்படுகின்றது. இன்று தமிழர்களின் மொழி, வணக்க வழிபாடுகள் என்பன எல்லாம் அழிந்து போக வழி சமைக்கப்பட்டுள்ளது. அன்று பாரதி தமிழுக்கு ஒரு விழிப்பை துடிப்பை ஏற்படுத்தினான். அதன் பின் வந்த பாரதிதாசன் “தமிழுக்கு இன்னல் என்றால் சங்காரம் நிஜம்” என்று முழங்கினான். “தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” என்ற முழக்கம் எங்கும் எழுந்தது. அந்த நேரம் தமிழ் தலைவர் பெரியார் தமிழன் வீழ்ந்த காரணத்தை ஆராய்ந்து அதனை உடைத்தெறிய சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். புpராமண, ஆரியர்களால் தமிழ் சமூதாயம் பல சாதி கூறுகளாக பிரிக்கப்பட்டதை உடைத்தெறிய தமிழர் படையை தட்டி விட்டார்.
அவரால் தளபதியென வளர்க்கப்பட்ட அறிஞர் அண்ணா என்றழைக்கப்பட்ட திரு அண்ணாதுரையால் திராவிட நாடு என்ற உணர்வு பூர்வமான கோசம் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்தது. திராவிட நாடு திராவிடருக்கே என்ற கோசம் வேகமாக வளர்ந்து வந்தது. அறிஞர் அண்ணாவின் படை வளர்ச்சியில் தந்தை பெரியாரின் இயக்கம் தொய்வடைந்தது. அறிஞர் அண்ணாவின் படையில் தமிழ் மொழி விழிப்படைந்தது. அவர் படையில் பேராசிரியர்கள், புலவர்கள், வித்துவான்கள் என்று எண்ணிலடங்காத தமிழ் இளைஞர் கூட்டம் தெருவெங்கும் தமிழ் கூட்டியது. எங்கு திரும்பிலும் தமிழ் மொழி ஓங்கி வளர்ந்தது.
அதற்கேற்ற வகையில் அவர்தம் படையில் நாவலர், நெடுஞ்செழியன், இரா சம்பந்தன், திரு ல.ப. நடராஜன், மதியழகன், ஆசைதம்பி, கவிஞர் கன்னதாசன், கலைஞர் கருணாநிதி, அன்பழகன், சீனிவாசன் என்று எண்ணற்ற தமிழர் கூட்டம் தமிழகத்தை தமிழ் மொழி உணர்வால் உயர்த்தியது. இந்நேரம் திராவிட நாடு திராவிடருக்கே என்ற கோசம் துடிப்பாக தமிழ் உணர்வுகளில் மேலோங்கியது. இந்த நேரம் இந்தியா அதாவது மத்திய அரசே கலங்கும் அளவுக்கு துடிப்பு தமிழர் உள்ளமெங்கும் உயர்ந்தது.
இந்த நேரத்தில் தமிழர் துடிப்பை அடக்கும் முறையில் வஞ்சகமான மாநில சுயாட்சி தேர்தல்; வந்தது. இந்த தேர்தலில் நம் தலைவர்களுக்கு, தி.மு.க எனும் “திராவிட முன்னேற்ற கலகம்” அதற்கு போட்டியிட எண்ணம் வந்தது. போட்டியிட்டது. திரண்ட தமிழர்கள் தி.மு.க. விற்கு வாக்களித்து அது வெற்றி பெற வழி சமைத்தார்கள். ஆட்சி அமைத்ததோடு எல்லாம் சரி. ஆட்சி கதிரை எல்லா சுகங்களையும் தந்தது. வந்த வழி மறந்தது. கொண்ட கொள்கை விட்டகன்றது. கை கோத்து அணைத்து வந்தவர்கள் கை விடப்பட்டார். முதலில் பிரிந்தார் இரா. சம்பந்தன். தொடந்து பிரிந்து சென்றவர் கவிஞர் கன்னதாசன். இப்படியாக தி.மு.க.வின் தாணைத் தளபதிகள் ஒவ்வொருவராக பெயர் தெரியாமல் மறைந்து போனார்கள். அண்ணாவை புற்று நோய் பறித்து கொண்டது. அதன் பின் பிளவுகள். மக்கள் திலகமென போற்றி வளர்க்கப்பட்ட ஆ.பு.சு. வெளியே வீசப்பட்டார். தொடர்ந்து விலகியவர்கள் நாவலர் மற்றும் இரா நெடுஞ்செழியன் ஆகியோர். மற்ற தாணைத் தளபதிகள் என்ன ஆனார்கள் என்றுமறியா வகையில் அவர்கள் பெயர் மறைந்தது. தளபதிகளுக்கே இப்படியென்றால் சாதாரண தொண்டன், உணர்வு கொண்ட தமிழ் மக்களுக்கெல்லாம் என்ன நடந்து இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். வெட்கப்படும் அளவுக்கு வேதனை கொண்டோம். அலங்கரிக்கும் அரசியல் கதிரையின் சுகபோகத்தில் தமிழனின் விழிப்பு வீழ்ச்சி கொண்டது. வெட்கப்பட்டு வேதனைப்பட்டு வழி தடுமாறி நிற்கின்றது. இன்று அந்த தமிழ் விழிப்பு நிலையில் வந்த தளபதிகளில் ஒருவர் மட்டும் கதிரையை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். ஆனால் தந்தை பொரியாரின் சுயமரியாதை கோசம் மட்டும் உயரவேயில்லை. இதனால் இன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் பெரியார்களை, தமிழ் அறிஞர்களை எல்லாம் சும்மா பேச்சாளர்களாகவே பார்க்கின்றனர்ஃ இந்த நிலை மாற வேண்டும். இராமன் அணை விவகாரம் தமிழ் நாட்டையும், ஈழத்தையும் தொடர்பு கொண்ட ஒரு வரலாறு. இது கவி குளம் கட்டியதோ அணில் குளம் கட்டியதோ என்பதல்ல எங்கள் வாதம். இது எங்ள் நாட்டை சார்ந்த வரலாறு. இதன் பின்புலம் ஒரு வணக்க வழிபாடும் உண்டு. ராமர் கதை கற்பனை என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொள்வோம். அப்படியென்றால் அந்த கதையை புணைந்த வால்மிகி முனிவருக்கு கடலுக்கடியில் தமிழ் நாட்டுக்கும், ஈழ நாட்டுக்கும் இடையில் உள்ள நீருக்கடி தொடர்பை எப்படி தெரிந்து கொண்டார். அவர் கடலுக்குள் நீந்தி போய் கண்டாரா இல்லை கணணி மூலம் பார்த்தாரா? அது போகட்டு; இலங்கை தீவில் மலை நாட்டில் ஓரிடம் உண்டு. இதற்கு நுவரெழியா என்று பெயர் இங்கு சீதா எழிய என்ற ஒரு இடம் உண்டு. இது காடும் வனமும் சேர்ந்த இடம். இந்த இடத்தில் தான் சீதையை ராவணன் சிறை வைத்திருந்தான் என்றும், இங்கு சீதா பிராட்டி குளித்த இடம், உறங்கிய இடம் என்று அடையாள படுத்தக்கூடிய கதைகளும் உண்டு. பிரிதொரு இடத்தில் விகாரை ஒன்று உள்ளது. அதற்கு “திவுருங்வெல” விகாரை என்று பெயர். அதாவது சீதை தீக்குளித்து சத்தியம் செய்தது இந்த இடத்தில் தான் என கதைகள் கூறுகின்றன. இப்படி பல அடையாள கதைகள் உண்டு. இவற்றை ஆராய்வோர் ஆராயலாம். ஆராய ஆயிரம் உண்டு. இன்று நமது திராவிட பெரியார் எடுத்துக் கொண்டு வெளி வந்த சுய மரியாதை இன்று உள்ளதா? தமிழனுக்கு பாரதத்தில் மரியாதை உண்டா? “கண்ணீர் துளிகள்” என அவரால் தூற்றப்பட்டவர்களாவது இன்று சுயமரியாதையை பெற்று விட்டனரா? “தமிழ் மொழியும் தமிழ் கலை கலாசாரங்களையும் உலகம் எல்லாம் பரப்ப வழி செய்வோம”; என்ற பாரதியின் கனவு என்ன ஆனது? இந்த நேரத்தில்:- 1956ம் ஆண்டு ஈழத்திருநாட்டில் தமிழர்களின் மொழியுரிமை மறுக்கப்பட்டது. அன்று காந்தியின் வழியில் ஈழத்திருநாட்டில தந்தை செல்வநாயகத்தால் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பமானது. சுpங்கள காடையர் அதாவது சிங்கள காடையர்களால் அனுப்பப்பட்டவர்களால் கல்லெரிந்து காயப்படுத்தி அடித்து உதைத்து கலைக்கப்பட்டது. இங்கு தமிழனின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு அன்று தமிழ் நாட்டில் அண்ணாவின் தலைமையில் ஆதரவு கூட்டங்கள் நடைபெற்றன. அதில் இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அன்று பேசியதில் ஒன்றை நினைவு கூற விரும்புகின்றேன். “தமிழனுக்கு என்று ஒரு கொடியிருந்தால்தமிழனுக்கு என்று ஒரு படை இருந்திருந்தால்இன்று ஈழத்தில் தமிழர் துயர் படுவாரோ?” என்று இள வயதின் துடிப்பின் காரணமாக அடுக்கு மொழியில் அன்று கூறியது இன்று என்ன ஆனதோ? இன்று இந்தியாவில் தமிழனுக்கு என்று ஒரு கொடியுண்டா அல்லது தனக்கென துடிப்பான படைதான் உண்டா? அன்று ஒரு படை இருந்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் இன்றும் தமிழன் வதைப்பட்டு உதைப்பட்டு வீடிழந்து நாடிழந்து உலகெங்கும் பரவி கிடக்கின்றார்கள். அதேநேரம் எஞ்சியுள்ள தமிழர்களோ படும் வதையோ சொல்லில் அடங்காது. பெரும் பெரும் கொடுமைகள் தமிழருக்கு எதிராக அரங்கேறுகின்றன.
அத்தோடு இலங்கை சிங்கள படைகளுக்கு இந்திய அரசு ஆயுத உதவிகள் செய்கின்றது. சிங்கள படைக்கு பயிற்சி வேறு அளிக்கின்றது. ஈழ தமிழர் படும் அல்லல்களை இந்தியாவில் யாரும் நினைத்தால் கூட தமிழக அரசே சட்டம் போட்டு அந்த உணர்வை அடக்குகின்றது. தமிழர் எழுச்சியை, தமிழர் விடுதலை உணர்வை சிங்கள அரசோடு சேர்ந்து அடக்குகின்றது. தமிழக இளைஞர்களோ துடிக்கின்றார்கள். முறையான தலைமையொன்றை தேடுகின்றார்கள்.
ஆனால் தமிழ் மாநில முதலமைச்சரோ அன்று மேற் கூறிய வார்த்தைக்கு உரியவரான கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் கூறியதையையே தான் மறந்து தமிழர்களை அழித்து ஒழிக்க படைக்கலங்களும் பயிற்சிகளும் சிங்கள படைகளுக்கு கொடுத்து உதவுகின்றார். உறங்கும் பூனை பொல் தான் ஒன்றும் அறியாத அப்பாவி போல் தமிழகத்திலுள்ள தமிழ் ரத்தங்களை ஏமாற்றுகின்றார்.
மற்ற துடிப்பான தலைமைகளோ தம்மத்தியில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற முதுபொழியை பின்பற்றாமல் ஒற்றுமையின்றி தனித்தனியாக இயங்குவதால் உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு நிற்கின்றோம். இன்று உலகம் தமிழர்களை பார்த்து கேலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. உயிரை இழந்து, உடமையை இழந்து, உறவுகளை இழந்து கடைசியில் பூர்வீக நிலத்தையும் இழந்து யுத்த பூமியில் செத்து மடிகிறோம். எங்கள் தொப்புள் கொடி உறவுகளெல்லாம் தவித்து மாய்கின்றன. ஆனால் தமிழனின் தலைவர் என்று கவி ஞாலம் போடுபவர் மட்டும் இன்னும் சயனத்தில். நன்றாக தூங்கட்டும். அவர் விழிக்கும் போது அவரின் நாட்காலி பறிக்கப்பட்டிருக்கும்.

Tuesday, March 3, 2009

விடுதலைப் போராட்டத்தில் இழப்புகளும், பின்னடைவுகளும் புதியவை அல்ல. களத்திலிருந்து ஆதிரையன்

தமிழீழ விடுதலைப் போராட்டத் தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல் வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவு களையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது.
விடுதலைக்காக வீறுகொண் டெழுந்த போராட்ட இயக்கங்கள் “தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு” என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயல்திறனும் மாறுபட்டு,
முரண்பட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை செப்பனிட்டு நேர்ப்படுத்தி விடுதலைப் போராட்டத்தின் தலைமை ஏற்று விடு தலைப் புலிகள் இயக்கம் அன்றைய காலகட்டத்தின் நெருக்கடிகள் எல்லாம் சாதுரியமாக தீர்வுகண்டு முதலாம் கட்ட ஈழப்போரின் முடிவில் யாழ். குடா நாட்டையும் கிளிநொச்சி நகரப்பகுதி தவிர்த்த மாவட்டத்தின் பெரும் பகுதியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
கிளிநொச்சியின் கேந்திரத் தன்மையை 1984ஆம் காலப்பகுதியில் உணர்ந்ததனாலேயே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்கேகடுவ கிளிநொச்சி யில் தங்கியிருந்து போராளிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டவேளை 1985ஆம் காலப் பகுதியில் கிளிநொச்சி இராணுவப் போலிஸ் நிலையம் மீது முதலாவது வாகன குண்டுத்தாக்குதல் நடத்தப் பட்டது.
இத்தாக்குதலுடன் கிளிநொச்சி நகரத்தின் மீதான அழிவுத் தாக்குதல் கள் ஆரம்பமாகி இன்றுவரை அந் நகரம் மாறிமாறி மிகப்பெரும் அழிவு களை சந்திப்பது அந்நகரத்தின் துர திர்ஷ்டமே.
வடமாகாணத்தின் முக்கிய மான விவசாய வர்த்தக நகராக உரு வெடுத்த கிளிநொச்சி பின்நாளில் தமிழரின் இராஜதந்திர நகரம் என்ற உலகளாவிய ரீதியில் அறியப்படும் அளவிற்கு அதன் வளர்ச்சி அபரிமித மானது.
1985ஆம் ஆண்டு வாகனக் குண்டு தாக்குதலுடன் ஆரம்பமாகிய கிளிநொச்சி மீதான படை நடவடிக்கை கள் இந்திய இராணுவ வருகையுடன் மேலும் சிதைவுகளைச் சந்தித்தது.
இந்திய இராணுவம் வெளி யேறியபின் 1990ஆம் ஆண்டு 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவுடன் கிளிநொச்சி நகரத்தை கைப்பற்று வதற்காக புலிகள் இயக்கம் உக்கிரமான முற்றுகைத் தாக்குதல்களை மேற் கொண்டது.
அப்போது இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஒரு மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள இதனைப்பயன்படுத்தி கிளிநொச்சியிலிருந்த இராணுவத்தினர் ஆனையிறவுக்குத் தப்பிச் சென்றனர்.
இந்த இரு பகுதியினரும் மேற்கொண்ட மீட்புச் சண்டையினால் கிளிநொச்சி நகரம் இரண்டாவது தடவையாகவும் பெரும் அழிவைச் சந்தித்தது. ஆனால் இதன் மூலம் ஆனையிறவுக்குத் தெற்கு கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப்பகுதி யும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
கிளிநொச்சி மீண்டும் புத்துயிர் பெற்று வன்னியின் வர்த்தக மையமாக வளர்ச்சியடையத் தொடங்கிய போதி லும் 3ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்ப மானதும் யாழ். குடா புலிகளின் கையிலிருந்து நழுவியபின் 1996ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாமை புலிகள் மீட்டுவிட,
அன்றைய சந்திரிக்கா அரசாங்கம் கிளிநொச்சி மீது 1996இல் சத்ஜெய 01, 02, 03 என மூன்று மிகப் பெரிய இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கிளிநொச்சி நகரத்தையும், அதன் தெற்கே ஏ9 வீதியில் கிளி நொச்சி இந்துக் கல்லூரி வரை கைப்பற்றியது. 1997ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடல் தாக்குதல்கள் அதிகரித்தன.யாழ்ப்பாணத்திற்கான கடற்போக்கு வரத்திற்கு கடற்புலிகளினால் ஏற்படுத் தப்பட்ட மிகப்பெரும் தடையினால் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப் பாதையின் அவசியத்தை உணர்ந்த அரசு யாழ்ப்பாணத்திற்கான தரை வழிப்பாதை திறப்பு எனக்கூறி கொண்டு 1997ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 பாதையூடாக மாங் குளத்தைக் கடந்து கிளிநொச்சியில் தரித்து நின்றவர்களும் மாங்குளம் வந்தவர்களும் கைகுலுக்குவதற்கு தயாரான போது, கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 1998ஆண்டு ஜனவரி மாதம் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்புத் தாக்குதல், அதன் பின்னர் 1998 செப் டம்பர் மாதம் கிளிநொச்சி நகரத்தின் மீது புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 2 நடவடிக்கை ஆகிய வற்றின் மூலம் கிளிநொச்சி நகரம் மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆளு கையின் கீழ் வந்தது.
ஆனால், 1985இலிருந்து 1998 செப்டம்பர் வரை கிளி நொச்சி நகரம் கண்ட பல இராணுவப் பலப்பரீட்சைகளும், அதனால் மூண்ட கடும் சண்டைகளும் அந்நகரத்தினை மண்மேடாக்கிவிட்டுப் போய்விட்டது.
1998 செப்டம்பர் கிளிநொச்சி நகரம் புலிகளால் கைப்பற்றப்பட்டாலும் அது இராணுவ தாக்குதல் வளையத் துக்குள் தொடர்ந்து உட்பட்டதாகவே இருந்தது.
1999 நவம்பர் விடுதலைப்புலிகள் மேகொண்ட ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் வன்னிப் பெரு நிலப்பரப்பை புலிகள் கைப்பற்றியதோடு கிளிநொச்சிக்கான அச்சுறுத்தலாக இருந்த ஆனையிறவு கூட்டுப் படைத்தளமும் வீழ்ச்சியடைந்தது.
இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப்பரப்பளவும் அதாவது இரணை மேடுச் சந்தியிலிருந்து முகமாலை வரையான பகுதிகள் புலிகளின் கைகளில் வீழ்ந்தன.
போரின் கோரவடுக்களால் மண்மேடாகிக் கிடந்த கிளிநொச்சி நகரம் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கிற்று. அத்தோடு வன்னிக்கான நிர்வாக மையமாகவும் விடுதலைப்புலிகளின் நிர்வாக மையமாகவும் மாற்ற மடையத் தொடங்கியது. அதுமட்டு மல்லாது.
தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் மூலம் புலிகளால் நிலை நிறுத்தப்பட்ட இராணுவச் சமநிலையும் இதனால் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையும் சர்வதேச இராஜ தந்திரிகளின் கிளிநொச்சி வருகையும், அவர்களின் சமரசப் பேச்சுக்களும் கிளிநொச்சியை சர்வதேச அளவில் புலிகளின் இராஜதந்திர நகரமாக மாற்றியது.
துரித கதியில் மகோன்னத வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது என்று சொல்வதே பொருத்தம்.
ஏனெனில், சமாதான ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சிப் பகுதியெங்கும் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணப் பணிகளின் வேகமும் அதன் வளர்ச்சியும் சர்வதேச இராஜ தந்திரிகளை வியப்புக்குள்ளாக்கியது.
இதன் வெளிப்பாடுதான் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் “இரண்டாம் உலகப் போரின் அழிவிலிருந்து ஐரோப்பா மீண்டெழ நீண்ட காலம் எடுத்தது. ஆனால் குறுகிய சில மாதங்களிலேயே வன்னியின் எழுச்சி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.” எனக் குறிப்பிட்டமையாகும். இதிலிருந்து கிளிநொச்சியின் வளர்ச்சியின் போக்கினை நாம் உணரமுடியும்.
மீண்டெழுந்த கிளிநொச்சியின் துரதிஷ்டமோ என்னவோ, சமாதான உடன்படிக்கை முறிவும், கடந்த ஒன்றரை வருடங்களாக கிளிநொச்சியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையும் பல பரிமாணங்களைத் தாண்டி, 2008 டிசம்பர் 31இல் பரந்தன் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஜனவரி 2இல் கிளிநொச்சி நகரத்தினை இராணுவப் பிடிக்குள் மீண்டும் சிக்கவைத்துவிட்டது.
இதற் கான போரின் மூலம் கிளிநொச்சி நகரம் அழிந்த நகரமாக மக்கள் அற்ற நகரமாக, பாழுதடைந்த நகரமாக மாற்றமடைந்து விட்டது. கிளிநொச்சி நகரத்திற்கான படையெடுப்பானது 57ஆவது டிவிசன் படையணிகள் முறையே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் பிரிகேடியர் சவீந்திர சில்வா ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டது.
படையினர் கடந்த மூன்று மாதங்களாக முட்டி மோதிய பாரிய இழப்புகளைச் சந்தித்து பரந்தனூடாக முன்னேறி, ஏ9 வீதியை இரண்டாகப் பிழந்து பெட்டியடித்து நிலைகொண்டு, கிளிநொச்சியை மூன்றுபக்கமும் சூழ்ந்து பரந்தனிலிருந்தும், அடம்பனிலிருந்தும், இரணைமடுச் சந்திப்பிலிருந்தும் மும்முனைகளில் நகர்ந்து கிளிநொச்சி நகரத்தினை தமது காட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கின்றனர்.
இதன்மூலம் ஏ9 வீதியில் வவுனியாவிலிருந்து பரந்தனுக்கு அப்பால் உமையாள் புரத்திற்கு அண்மைவரை ஏ9 வீதியை யும், அதற்கு மேற்குப்புறமுள்ள மேற்கு வன்னியின் முழுப்பரப்பையும் படைகள் தமது கட்டுப்பட்டின்கீழ் கொண்டு வந்துள்ளன.
அத்துடன் கிழக்கு வன்னி யின் மாங்குளத்திற்கும், முல்லைத் தீவுக்கும் இடையேயான ஏ34 வீதியின் தென்பகுதியாகிய கிழக்கு வன்னியின் தென்அரைப்பாகம் முழுவதும் இராணு வக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது.
கிளிநொச்சி நகரத்தின் முழுப்பகுதியும் இராணுவ பிடியில் அகப்பட்டதோடு பரந்தனிலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ35 வீதியின் இரண்டாம் மைல்கல்லுக்கு அண்மை வரை படையினர் அண்மித்திருக் கின்றனர்.
கிளிநொச்சி நகரம் முழுவதும் இறுதிவரை சண்டையிட்ட புலிகளின் படையணிகள் தமது இழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் படிப்படியாக பின்வாங்கி திருவையாற்றுப் பகுதியிலும் இரணைமேடு குளக்கட்டுப் பகுதிலும், வடக்காக முரசுமோட்டை கண்டா வளை, ஊரியான் ஆகிய பகுதிகளை இணைக்கும் ஒரு நேர் கோட்டில் புதிய முன்னரங்கப் பகுதியை நிறுவி நிலையெடுத்திருப்பதாக களமுனைத் தகவல்களிலிருந்து அறியமுடிகின்றது.
இதன்மூலம் இரணைமடுக் குளத்தின் ஆரம்பத்திலிருந்து ஊரியான் வரையான புதிய முன்னரங்கப் பகுதி யில் சண்டைகள் நிகழ்வதற்கு சிறிது காலம் தாமதமாகலாம்.
ஆனால், புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய தனால், பரந்தனில் நிலைகொண்டிருக் கும் படைகளுக்கு ஏற்பட்ட உளவுரண் உறுதி அவர்களை ஆனையிறவு நோக்கி நகர உந்துவது இயல்பானதே.
எனவே இதன் மூலம் இரணைமடுக் குளத்தின் ஆரம்பத்திலிருந்து ஊரியான் வரையான புதிய முன்னரங்கப் பகுதி யில் சண்டைகள் நிகழ்வதற்கு சிறிது காலம் தாமதமாகலாம்.
ஆனால், புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய தனால், பரந்தனில் நிலைகொண்டி ருக்கும் படைகளுக்கு ஏற்பட்ட உளவுரண் உறுதி அவர்களை ஆனை யிறவு நோக்கி நகர உந்துவது இயல்பானதே.
எனவே படைகள் உடனடியாக உமையாள்புரப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் முன்னரங்கை நோக்கி ஒரு பாய்ச்சல் சூட்டோடு சூடாக இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். கிளிநொச்சியின் வீழ்ச்சியானது முகமாலைப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் படை யணிகளுக்கு ஒரு நெருக்கடியை கொடுத்திருக்கிறது என்பது உண்மையே.
ஏனெனில் முகமாலை பகுதிக் கான நேரடி வழங்கல் பாதை முடக்கப் பட்டு விட்டது.
எனினும் முகமாலைப் பகுதிக்கான விநியோகங்களை கடல் வழியாகவோ அல்லது கண்டிக்குளம் வழியாகவோ கடைசிவரை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும்.
எது எப்படியி ருப்பினும் ஆனையிறவு நோக்கி படையினர் நகர்கின்றபோது கிளாலி முகமாலைப் பகுதியிலும் சரி, நாகர் கோவில் பகுதியிலும் சரி, சண்டையிடும் புலிகளின் படையணிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
ஏனெனில், முகமாலைக்கும் ஆனையிறவுக்கும் இடைப்பட்ட பச்சி லைப்பள்ளிப் பிரதேசமும், சுண்டிக் குளம் தொடக்கம் நாகர்கோவில் வரை யான வடமாராட்சி கிழக்குப்பகுதியும் ஒடுங்கலான பிரதேசமாகவுள்ளது.
தற்போதைய நிலையில் அதன் இருபக்கங்களிலும் இராணுவம் நிலை கொண்டிருப்பதோடு பாக்கு வெட்டியில் அகப்பட்டிருக்கும் பாக்கின் நிலையை ஒத்ததாகவே பச்சிலைப்பள்ளி இருக் கின்றது.
இவ்வாறு ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலை புலிகள் தக்கவைப் பதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கப் போகின்றார்கள் என்பதையிட்டு இராணுவ விற்பன்னர்கள் மண்டை யைப் பிய்யக்கத் தொடங்கிவிட்டனர்.
எனினும் முகமாலைப் பகுதியை எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள் வந்தாலும் தக்கவைப்பதற்கு புலிகள் முனைவர். கிளிநொச்சி கைப்பற்றப் பட்டமை முல்லைத்தீவு நோக்கிய நகர்வின் முனைப்பினை மேலும் தீவிரப்படுத்தக்கூடும்.
59 ஆவது டிவிசன் மணலாற்றுப் பகுதியிலிருந்து நகர்ந்து ஏ34 வீதியில் கூழாமுறிப்பு, முள்ளியவளை, தண் ணீரூற்று ஆகியவற்றைக் கைப்பற்றிய தோடு முல்லைத் தீவின் நுழைவாயி லான நீராவிப்பிட்டி வரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததோடு, வீதியின் வடபுறம் நகர்ந்து வற்றாப்பாளை கிராமத்தை முற்றுகை யிடுவதோடு வற்றாப்பளை புதுக் குடியிருப்பு வீதியில் உள்ள கேப்பா புலவு நோக்கி நகர்ந்து கேப்பாபுல வுக்குத் தெற்கே 3 மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
முல்லைத் தீவினுள் நுழைவதற்கு ஏ34 வீதியில் நீராவிப்பிட்டிக்கு அப்பால் நகர்வதற்கு புலிகள் கடும் எதிர்ப்புக் காட்டுவதனால் முல்லைத்தீவு நகரை யும், முள்ளிவாய்க்கால்ப் பகுதியையும் முற்றுகையிடும் நோக்கில் கேப்பா புலவைத் தாண்டி நந்திக்கடலைச் சுற்றிச் சென்று ஏ35 வீதியை முள்ளி வாய்க்கால்ப் பகுதியில் ஊடறுப்பதன் மூலம் முல்லைத் தீவை வீழ்த்துகின்ற மூலோபாயத்தினை படைத்தரப்பு வகுத்திருப்பதாகவே தெரிகிறது.
கூழாமுறிப்புப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் படையினர் மேற்கு நோக்கி ஒட்டுச்சுட்டான் நோக்கியோ அல்லது கெருடமடு, பேராற்றுப் பகுதி நோக்கி நகர்ந்து ஒட்டுச்சுட்டான் புதுக்குடியிருப்பு வீதியை ஊடறுப்பதன் மூலம் ஒட்டுச்சுட்டானை வீழ்த்துவ தற்கான நகர்வுகளை மேற்கொள் வதற்கான முஸ்தீபுகளில் படையணியினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாங்குளம் பகுதியிலிருந்து நகர்ந்த படையினர் கரிப்பட்ட முறிப்புவரை நகர்ந்து அங்கிருந்து தெற்காக அம்பகாமம், பீலிக்குளம் வரை நகர்ந்து இரணைமடுக்குளத்தின் தென் புறத்தை அண்மித்தும் இரணைமடுக் குளத்தின் கிழக்குப் புறமாக பழைய கண்டிவீதிவழியே வட்டக்கச்சி நோக்கி நகர்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட் டிருக்கின்றனர்.
ஆகவே, மொத்தத்தில் வன்னிமீதான படைநடவடிக்கை என்பது பூநகரி ஊடான யாழ்ப்பாணத் திற்கான தரைவழிப்பாதை திறப்பு,
கிளிநொச்சி கைப்பற்றுதல், வன்னி மக்களை விடுவித்தல், ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான போர் என நோக்கங்கள் காலத்திற்குக் காலம் மாறி தற்போது புலிகளை அழித்தொழித்தல் என்ற கோசத்துடன் இன்று வன்னியில் மிகப்பெரும் மனித பேரவல விளிம்பில் வந்து நிற்கிறது.
இராணுவம் மேற்கொண்ட படைநடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தமது இழப்புகளை முடிந்தவரை குறைத்து படையினருக்கு எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்தி,
இராணுவ நெருக்குதல்கள் மறுபுறம் என புலிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களை முறியடிப்ப தற்கு வெறும் தற்காப்பு முறியடிப்புத் தாக்குதல்கள் இனியும் பயனளிக்கப் போவதில்லை.
படைகளின் முன்னணிப் படைப்பிரிவுகளைச் சிதைத்து படிப்படி யான தந்திரோபாயப் பின்வாங்கல்களை மேற்கொண்டுவந்த புலிகள் இயக்கம் இன்று கிழக்கு வன்னியின் வட அரைப்பாகத்தில் குறுக்கிய பகுதியினுள் தனது முழுப்படையணிகளையும் குவித்துள்ளது. இந்நிலையில் மூன்று பக்கங்களிலும் இராணுவ நெருக்குதல் களை எதிர்கொண்டவாறு தற்காப்புத் தாக்குதல் வியூகத்தை கடைப்பிடிப்ப தென்பது இனியும் தொடர முடியாது.
வன்னியில் ஆனையிறவு நோக்கியமுனை, இரணைமடுக் குளப் பகுதி நோக்கியமுனை, கரிப்பட்ட முறிப்பு, ஒட்டுசுட்டான் மற்றும் முல்லைத்தீவு, கேப்பாபுலவு, ஆகிய முனைகள் நோக்கி சண்டைகள் விரிந் திருப்பதனால் ஒடுக்கப்பட்டிருக்கின்ற குறுகிய நிலப்பரப்பினுள் செறிந் திருக்கும் ஒட்டுமொத்த வன்னி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் ஒருபுறம்.
இராணுவ நெருக்குதல்கள் மறுபுறம் என புலிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களை முறியடிப்ப தற்கு வெறும் தற்காப்பு முறியடிப்புத் தாக்குதல்கள் இனியும் பயனளிக்கப் போவதில்லை.
எனவே வன்னிமீது போடப்பட் டிருக்கும் இறுக்கமான முடிச்சை அவிழ்ப்பதற்கும் இராணுவ முஸ்தீபை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரேவழி புலிகள் மேற்கொள்ளும் வலிந்த தாக்குதலேயன்றி வேறெதுவும் இல்லை என்ற நிலைக்கு விடுதலைப் புலிகளை இட்டுச் சென்றுவிட்டது.
ஆகவே, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்களும், பின்னடைவுகளும் ஒன்றும் புதியவையும் அல்ல. நிரந்தரமானவையும் அல்ல.
இதற்கு உதாரணமாக கிளி நொச்சி நகரமே பல முறை கைமாறி விட்டதல்லவா? காலத்திற்குக் காலம் ஏற்பட்ட நெருக்கடிகள் இழப்புகளையும் தாண்டி ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம் உத்வேகத்துடன் முன் னோக்கி தள்ளப்பட்டதுதான் வரலாறு.
ஆகவே கிளிநொச்சி வீழ்ந்தால் என்ன? முல்லைத் தீவு பறிபோனால்தான் என்ன? வெற்றிகள் எப்போதும் ஒருவ ருக்குச் சொந்தமானதல்லவே. காலச் சக்கரம் சுழலும் காத்திருக்கும் தருணம் கைகூடும். களங்கள் கைமாறும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பாதையை மீண்டும் ஒரு முறை செப்பனிட்டு முன்னோக்கி நகர்த்தப் படும் என்பதில் புலிகள் இயக்கம் உறுதியாகவே உள்ளது.
எனவே விடு தலைப் போராட்டங்கள் முடிந்த தாகவோ அழிந்ததாகவோ உலக வர லாற்றில் நாம் எங்கேனும் கண்ட துண்டா? போராட்டம் என்பது தொடர்ச்சியானதே. அது முடிவில் லாததும் கூட.
நன்றி: தென்செய்தி

வான்கரும்புலியை அடையாளம் கண்டு சாதனை படைத்த ஸ்ரீ லங்கா

கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது வான் தாக்குதல் நடத்த வந்த விடுதலைப் புலிகளின் விமானி தொடர்பாக நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்திற்கு வெளியே அண்மையில் விடுதலைப் புலிகளின் விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணை நேற்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.
இதன் போது அங்கு இருவர் சாட்சியமளித்தனர். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இருவரது விபரங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும், தற்போது நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருக்கும் புலிகளின் விமானியின் உடலைப் பார்வையிட்ட பின்னரே உடலை அடையாளம் காட்டினர்.
இந்த விமானத் தாக்குதலின் பின்னர் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் புலிகளின் தலைவரின் இடப்பக்கமாக இருந்தவரது உடலும் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருப்பவரது உடலும் ஒன்றென அவர்கள் கூறியிருந்தனர்.
அத்துடன் இவர் அச்சுவேலி இடைக்காடு பகுதியைச் சேர்ந்த முருகப்பிள்ளை சிவரூபன் (வயது 32) என்றும் தெரிவித்தனர்.
இவரது தந்தை இறந்து விட்டதாகவும் இவருக்கு இரு சகோதரிகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இவர் புலிகளின் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து இறந்தவரது உடலை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு

பாகிஸ்தானில் லாகூர் கடாபி மைதானத்தில் இடம்பெறவிருந்த பாகிஸ்தானுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வதற்காக விளையாட்டரங்கிற்குச் சென்றபோது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் சென்ற வாகனம் மீதும், அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்ற பாகிஸ்தான் பொலிஸ் வாகனம் மீதும் இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இலங்கை கிரிக்கட் அணியின் 6 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த வீரர்கள் திலான் சமரவீர, தாரங்க பரணவித்தான, அஜந்த மெண்டிஸ், குமார் சங்ககார ,மஹேல ஜெயவர்தன மற்றும் துணை பயிற்றுவிப்பாளர் ஆகியோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹேல ஜெயவர்தன தனது காலில் சிறு காயம் ஏற்பட்டு உள்ளதாக அவரது மனைவிடம் தொலைபேசியில் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியுடனான இரண்டு போட்டிகளிலும் இரட்டைச் சதங்களைப் பெற்றுக்கொண்ட திலான் சமரவீர மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர் இருவருக்கும் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஏனைய காயமடைந்த நான்கு வீரர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் நடைபெறவிருந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடாபி மைதானத்திற்கு பேரூந்து மூலம் சென்ற கிரிக்கட் வீரர்கள் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் காரணமாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திக்கிடைத்த தகவல்களின்படி பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியின் காயமடைந்த வீரர்கள் உட்பட அனைவரையும் இன்று மாலை கொழும்புக்கு விஷேட விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Monday, March 2, 2009

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் பேரணி

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பேரணி நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி கர்நாடக தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
உடனடியாக போரை நிறுத்தி, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.
இலங்கையில் சிங்கள அரசு நடத்தி வரும் போரால் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை கண்டித்து, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த பேரணி நேற்று பெங்களூர் டவுன் ஹாலில் தொடங்கியது. இதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். மதியம் 2 மணிக்கு பேரணி தொடங்கியது.
இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணிக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராசன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிட கழக செயலாளர் எல்.பழனி, கர்நாடக தமிழ் மக்கள் இயக்க நிர்வாகி மாரி, தமிழ் பிரமுகர்கள் பழனிகாந்த், செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பிரபாகரன் மற்றும் புலிக்கொடி ஏந்தியபடி ஊர்வலம்!
திறந்தவெளி லாரியில் இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் உள்பட தமிழ் பிரமுகர்கள் சென்றனர். அதைத்தொடர்ந்து சாரை சாரையாக பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் கையில் தமிழ் இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் எழுதப்பட்ட பேனர்களை வைத்து இருந்தனர். இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி குழந்தைகளின் படங்களையும் பிடித்தப்படி சென்றனர்.
ஏராளமான தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தைக் கையில் ஏந்தியப்படி வந்தனர். சிலர் தமிழீழப் படம் மற்றும் புலிகளின் சிவப்புக் கொடியை ஏந்தி உணர்ச்சி மயமான கோஷங்களுடன் சென்றனர்.
கொல்லாதே கொல்லாதே தமிழர்களை கொல்லாதே..,
இந்திய அரசே, இந்திய அரசே சிங்கள ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்காதே..,
வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும்…,
மோதாதே மோதாதே தமிழனிடம் மோதாதே..,
ஈழ ரத்தம் எங்கள் ரத்தம்..,
புலிகள் மீதான தடையை நீக்கு,
இந்திய அரசே இந்திய அரசே போரை நிறுத்த நடவடிக்கை எடு..,
தமிழர் ரத்தம் குடிக்கும் ராஜபக்சேதான் பயங்கரவாதி…

என கோஷங்களை உரத்த குரலில் உணர்வுப் பொங்க எழுப்பினார்கள்.

தெகிவளையில் தமிழ் இளைஞர்கள் கைது

தெகிவளை பகுதியில் ஸ்ரீ லங்கா போலீசாரால் 8 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தெகிவளை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர்களது உறவினர்களால் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணையதள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் நல்வரவுக்காக இந்த இணையதளம் என்றும் கண் மூடாது விழித்திருக்கும். எமது இணையதளத்துக்கான ஆதரவு என்றென்றும் கிடைக்கும் என நம்புவோமாக.
நன்றி