Monday, September 14, 2009

சாகித்திய விழாவில் மஹிந்த ராஜபக்~ திடீரென ஆசனத்திலிருந்து திடீரென கீழே விழுந்தார்

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்~, அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்துள்ளார். இதனால் முதுகில் ஏற்பட்ட ஊபாதை காரணமாக, பிரதான உரையை நிகழ்த்தவிருந்த ஜனாதிபதி சிகிச்சைக்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முன்னதாக சம்பிரதாய முறைப்படி குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர சென்ற போது, ஜனாதிபதி திடீரென கீழே விழுந்துள்ளார். அவரது ஆசனம் பின்பக்கமாக சரிய உடனடியாக ஜனாதிபதி தூக்கிய அவரது
பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், வேறு ஒரு ஆசனத்தில் அமரச் செய்துள்ளனர். இந்த நிலையில், ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களிடம் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினரும், ஜனாதிபதி விழுந்த காட்சிகளை கத்தரிக்குமாறு கூறியுள்ளனர்.

சில தொலைக்காட்சிகளின் விடியோ நாடாக்களை கைப்பற்றிய ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர், நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோப் படங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.கலாசார அமைச்சின் செயலாளரினால் நடத்தப்பட்ட நன்றியுரையின் பின்னர், சிலருக்கு விருதுகளை வழங்கிய ஜனாதிபதி, உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜோதிடர் ஒருவர், ஜனாதிபதி தனது ஆசனத்தில் இருந்து விழுந்தமையானது அவரது வீழ்ச்சியை குறிப்பதாக அமைந்துள்ளது என கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற சனிப் பெயர்ச்சியானது ஜனாதிபதிக்கு பாதமான பலனங்களை ஏற்படுத்தும் என ஏற்கனவே ஜோதிடர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment