Monday, September 7, 2009

தடுப்பு முகாம் மக்களுக்கு அழுக்கு ஆடைகளை வழங்கிய புலம்பெயர் சிங்களவர்

இன்று வவுனியா தடுப்பு முகாமில் வலயம் 4 ல் உள்ள மக்களை வரிசையாக வரும்படி கூறி,.. தாம் நிவாரண உடைகள் வழங்க இருப்பதாக வெளிநாட்டில் இருந்துவந்த சிங்களவர்கள்

தெரிவித்துள்ளனர். மாற்றுத்துணியின்றித் தவிக்கும் மக்கள் ஆவலாக வணங்கா மண் பொருட்கள் வந்துவிட்டதா ? எனக் கூடியுள்ளனர். பின்னர் தான் அது வெளிநாட்டில் உள்ள

சிங்களவர் சிலரால் இந்த ஆடைகள் சேகரிக்கப்பட்டு கடுகதியாக கொழும்புகொண்டுவரப்பட்டு பின்னர் அவை வலயம் 4 முகாம் மக்களுக்கு வழங்கப்படுவது தெரிந்தது.

பெறப்பட்ட உடுப்புகளை மக்கள் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியானார்கள், பழுதாகிய உடுப்பு, சில கிளிந்த நிலையில் உள்ள உடுப்பு மற்றும் அழுக்கு உடுப்புகளையே இந்தச் சிங்களவர்கள் கொன்டுவந்து தந்ததை உணர்ந்த மக்கள் ஆத்திரமுற்றனர், சிலர் மனவேதனை அடைந்தனர். எமது நிலை இவ்வளவு கேவலமாகப் போய்விட்டதே எனச் சிலர் கண்ணீர் வடித்துள்ளனர். இருப்பினும் இந்த உடுப்புக்களை எரிக்கவேண்டும் எனச் சில இளைஞர்கள் முற்பட்டதால் முகாமில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இன் நிலையில் வரிசையில் சரியாக வரவில்லை என ஒரு முதியவரை, வயாதானவர் என்று கூடப் பாராமல் இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். நாம் இது தொடர்பாக வலயம் 4 ல் உள்ள ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்ட நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment