வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொலியை பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது.
கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட அவர்களுக்கு மருந்து ஏற்றப்படும் நிலையில் தரையில் படுத்திருப்பதை இந்த காணொலி உறுதிப்படுத்துகின்றது. வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் இலையான்களை விரட்டுவதற்குக் கூட முடியாதவராக மண் தரையில் படுத்துக்கடப்பதை இதில் காண முடிகின்றது.
வவுனியாவில் உள்ள முகாம்களில் செல்லிடப்பேசி கமராவை பயன்படுத்தி இந்த காணொலி இரண்டு வார காலத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மழை காலம் தொடங்கியிருப்பதால் இந்த முகாம்களின் நிலைமை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஒரு நிலையில் இந்த காணொலி வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment