Friday, September 25, 2009

மஹிந்தவின் மதுபோதை

மகிந்த ராஜபக்~ எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் மது அருந்துவதைக் கைவிட்டிருந்ததாகவும் எனினும், தற்போது தினமும் இரவில் மது அருந்தி வருவதாகவும், மது அருந்திவிட்டு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வெறுமனே திட்டித்தீர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது அரசியல் நலனுக்கும், அவரது உடல் நலத்திற்கும் நல்லதல்ல எனவும், இதில் தலையிட்டு உடனடியாக ஜனாதிபதியின் மது அருந்தும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தனக்கு நெருக்கமான சிலரிடம் நேற்று முன்தினம் இரவு தெரிவித்திருப்பதாக தெரியவருகிறது.

தென் மாகாண சபைக்காக கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சந்திம ராசபுத்திர உள்ளிட்ட ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமே டளஸ் அழகப்பெரும இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு மது வழங்கியமை தொடர்பாக ஜனாதிபதியின் பிரத்தியேக வைத்தியரான அஜித் ரணவக்க மீது குற்றஞ்சுமத்தியிருக்கும் டளஸ் அழகப்பெரும ஜனாதிபதி தனியாக மது அருந்துவது மிகவும் ஆபத்தானது எனவும் கூறியுள்ளார். இதற்கு முன்னர், தினமும் அதிகாலையில் உடற்பயிற்சிகளை செய்து மிகவும் உற்சாகமாக பணிகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதியின் உற்சாகம் தற்போது காணாமல் போய்வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு நெருக்கமான பௌத்த தேர்கள் சிலருக்கு அறிவித்து அவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு போதிப்பது மிகவும் பொருத்தமானது எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரையோ, எதிர்க்கட்சியில் உள்ள ஏனையவர்களையோ பகிரங்கமாக விமர்ச்சிக்காது அந்தப் பொறுப்பை தமக்கும், அமைச்சர்களான மேர்வின் சில்வா, ராஜித்த சேனாரத்ன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச ஆகியோரிடம் பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதி அந்தக் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாது எதிர்க்கட்சித் தலைவர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருவதால் ஜனாதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி வெளியிடும் சில கருத்துக்களை ஊடகப் பதிவுகளிலிருந்து நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைச் சாடியமை அதிலொரு உதாரணம் மாத்திரமே எனத் தெரிவித்துள்ள அமைச்சர் அழகப்பெரும, ஜனாதிபதியின் இந்த நிலைமைக்கு அவரது இரத்த அழுத்தமே காரணம் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment