Thursday, September 3, 2009

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை களமிறக்குவது தொடர்பாக ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை களமிறக்குவது தொடர்பாக ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைதுள்ளதாக ஜே.வி.பி.யின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியொருவரை வேட்பாளராக நிறுத்தாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என ஜே.வி.பி.யினால் உத்தியோகப+ர்வமற்ற வகையில் கிடைத்துள்ள யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைத்துவத்தின் இணக்கம் கிடைத்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் முன்னாள் சிவில் சேவை அதிகாரியொருவர் குறித்தும் தற்போது எதிர்க்கட்சிக் கூட்டமைப்பின் தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எண்ணியிருந்த கரு ஜயசூரிய, எஸ்.பீ.திஸாநாயக்க ஆகியோர் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. பிரதிநிதிகளுக்கிடையே இவ்வாறு உத்தியோகப+ர்வமற்ற பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.யி.னால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர்கள் மூன்று பேரில் யாரைத் தேர்தலில் களமிறக்குவது தொடர்பான தீர்க்கமான இணக்கம் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment