படுகொலைகளையும், மனிதாபிமானமற்ற கொடூரங்களையும் உலகிற்கு அம்பலப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது
” தமிழ் விடோ ” ( Tamil widow - தமிழ் விதவை ) என்ற திரைப்படம் ! அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் தமிழ்செல்வம், இலங்கையில் முள்வேலிக்குள் அகதியாய் தவித்துக்கொண்டிருக்கும் தனது 80 வயது தாய் - தந்தையரை மீட்டு
தன்னுடன் அமெரிக்கா அழைத்து வருவதற்காக தனது மனைவி மேரியுடன் இலங்கை செல்கிறார். தாம் நிகழ்த்தும் இனப்படுகொலைகளையும்,மனித உரிமை மீறல்களையும் உலக நாடுகள் கண்டும், காணாமல் இன்னும் தம்மை தொடர்ந்து ஆதரிக்கும் தைரியத்தில்,தமது பெற்றோரை மீட்கும் முயற்சிக்கும் தமிழ்செல்வத்தை,
அவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக படுகொலை செய்கிறது இலங்கை படை! தனது கணவரின் படுகொலையை நேரில் கண்டு பதறித் துடிக்கும் மேரி, இலங்கையின் தமிழருக்கு எதிரான இந்த இனப்படுகொலைகள் மற்றும் அனைத்து விதமான மனிதாபிமானமற்ற கொடூரங்களையும், உலகின் சக்திவாய்ந்த நாடுகளும், அதன் தலைவர்களும் எவ்வாறு கண்டும் காணாமல் உள்ளனர் என்பதை அம்பலப்படுத்த முயற்சிக்கிறார்
மேரி. இலங்கைத் தமிழர்களை, அவர்கள் தமிழனாய் பிறந்த ஒரே காரணத்திற்காக இலங்கை அரசும், அதன் படைகளும் இனவெறி கொண்டு தமிழர்களை எவ்வாறு இனப்படுகொலை செய்கிறது என்பதை பார்ப்பவர்களின் கண்களிலும், இதயத்திலும் ரத்தம் கசிய வைக்கும் விதமாக காட்சிப்படுத்துகிறது இத்திரைப்படம்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்