Sunday, September 27, 2009
“பொட்டு நான் தனியப் போறன். பிறகு நீ போ. நான் போனால், நீ பார்”- தலைவர் பிரபாகரன்
2005ம் ஆண்டின் காலப்பகுதி அது. மகிந்த ராஜபக்ச சிறீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று போரைத் தொடங்கவில்லையாயினும் போருக்கான ஆயத்தங்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. இராணுவத்தினருக்கான போர் பயிற்சிகளிலும், ஆயுதக் கொள்வனவுகளிலும் சிறீலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தது.
மகிந்த அரசு பாரிய போர் ஒன்றைத் தொடங்கப் போகின்றது என்பது மிகவும் உறுதியாகத் தெரிந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்ல, போர் நிறுத்தத்தை மீறும் வகையில் ஆங்காங்கே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சில தாக்குதல் நடவடிக்கைகளிலும், விடுதலைப் புலிகளுக்கு ஆத்திரத்தை ஊட்டக்கூடிய செயற்பாடுகளிலும் சிறீலங்காப் படையினர் இறங்கியிருந்தனர்.
சிறீலங்காவின் இந்தப் போரை எதிர்கொள்ள, தமிழீழத் தேசியத் தலைவர் புதிய போர் வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தார். அதில் வான் புலிகளின் தாக்குதல்கள் திட்டமும் இருந்தது என்பதை நாங்கள் பின்னாளில்தான் அறிந்துகொண்டோம். விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பதாக செய்திகள் பரவலாக இருந்தபோதும், அதற்கான எந்தவொரு தடயமோ, ஆதாரமோ எவரிடமும் இருக்கவில்லை.
1998ம் ஆண்டு மாவீரர் தினத்தின்போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது தமிழீழ வான் படையினர் மலர்தூவி தமது முதல் பறப்பை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் வான் புலிகளின் பறப்பு 2005 காலப் பகுதியிலேயே நிகழ்ந்ததை அறிய முடிந்தது. வன்னி வான் பரப்பில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. தமிழீழத் தேசியத் தலைவரை சுமந்து கொண்டு தமிழீழ வான் படை வன்னியின் வான் பரப்பில் வட்டமடித்தது.
இந்த பறப்புச் செய்திகள் கூட விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள் மட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. மாவிலாற்றில் மகிந்த அரசு போரைத் தொடங்கி, கிழக்கை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தபோதும், வன்னியில் பெரும் தாக்குதல்கள் எவையும் இடம்பெறவில்லை. ஆனால், வன்னிப் பகுதியில் ஆள ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. இதனால் பொது மக்கள் மட்டுமல்ல போராளிகளும் இழப்பைச் சந்தித்துக் கொண்டிருந்தனர்.
கேணல் சார்ள்ஸ்
இந்த நிலையில்தான் 05.01.2008 சனிக்கிழமை மாலை மன்னார் பள்ளமடு பகுதியில் சிறீலங்கா ஆள ஊடுருவும் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கேணல் சாள்ஸ் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் சாள்சின் வீரச்சாவு விடுதலைப் புலிகள் மட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. காரணம் சாள்ஸ், பொட்டு அம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒரு உயர்மட்ட புலனாய்வுத் தாக்குதல் தளபதி. பொட்டு அம்மான் இல்லை என்றால் சாள்ஸ் என்ற நிலையில்தான் அப்போது விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு இருந்தது.
விடுதலைப் புலிகளின் பல கரும்புலித் தாக்குதல்கள் குறிப்பாக கட்டுநாயக்கா வான் படைத் தளம் மீதான தாக்குதல்கள் வரை எந்த நடவடிக்கை என்றாலும் சாள்ஸ் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருக்கும். தென்னிலங்கையில் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்தமுடியுமா என்ற சந்தேகங்கள் ஒருகாலத்தில் எழுந்தபோது, முடியும் என்று பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துக் காட்டியவர் கேணல் சாள்ஸ். ஒரு தாக்குதல் திட்டத்தை தலைவருக்கே விளக்குகின்ற அளவிற்கு பொட்டு அம்மானுக்கு அடுத்து சாள்ஸ் அவர்கள் தான் இருந்தார்.
சிறீலங்காவின் தென்பகுதி நடவடிக்கை தொடக்கம் இலங்கைப் பிரதேசம் எங்கும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் என்றால் சாள்ஸ் அவர்கள்தான் முக்கிய காரணம் எனச் சொல்லும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் இருந்தன.சாள்ஸ் அவர்களுக்கு அடுத்து கபிலம்மான் என்று தொடர்ச்சியாக பல்வேறு பொறுப்பாளர்கள் இவரது நடடிக்கைகளுக்கு பக்க துணையாக நின்று செயற்பட்டனர். சிறீலங்காவின் தென்பகுதி மீது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மன்னார் பிரதேசத்தில் தளம் அமைத்து சாள்ஸ் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
அந்தப் பிரதேசத்தை சாள்ஸ் தேர்ந்தெடுத்ததற்கு காரணமும் இருந்தது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேம் எங்கிலும் செல்பேசிக்கான ‘கவறேச்’ உள்ளது. அத்துடன் ‘டயலொக், சீடிஎம்ஏ., றண்கத்தா, மோட்டரோளா’ என்பனவற்றுடன் இந்தியாவில் இருக்கும் சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ‘சிக்னல்’கூட சிலவேளைகளில் கிடைக்கும் எனும் அளவிற்கு பல தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கவறேச் அங்கு தொடர்ச்சியாக இருந்தது. இது சாள்சின் நடவடிக்கைக்கு மிகவும் இலகுவாக இருந்தது.
அத்துடன், தென்னிலங்கைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்துவதற்கு சென்று வர மன்னார் கடல் பகுதியும், கரையை ஒட்டிய காட்டுபகுதியும் இலகுவாக இருந்தது. கடல்வழியாக புத்தளம் சிலாபத்துறைக்கு வெடிபொருட்களை கொண்டுசென்று சேர்ப்பதும் அங்கிருந்து தலைநகருக்கும் தென்னிலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் நகர்த்துவது இலகுவானதாக இருந்தது. இதனால், மன்னாரே பின்னர் சாள்சின் தளப் பிரதேசமாக மாறியிருந்தது. ஒரு கட்டத்தில் அப்பாதை படையினரின் முற்றுகைக்குள்ளானதால் மன்னாரின் கட்டையடம்பன், மடு போன்ற பகுதிகள் ஊடாக வில்பத்து சரணாலயம் சென்று அதனுாடாக தாக்குதலுக்கான போராளிகளும், வெடிபொருட்களும் நகர்த்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் முக்கியத்துவம் மிக்க பொறுப்பாளர்களில் ஒருவரான கேணல் சாள்ஸ் தலைவர் அவர்களுடன் அந்த வான் பறப்பில் ஈடுபட்டிருந்தார். இந்த அனுபவம் பற்றி இவரது வீரச்சாவு நிகழ்வில் கலந்துகொண்ட பொட்டு அம்மான் போராளிகளுக்கு கூறியதைக் கேட்டாலேயே, விடுதலைப் போராட்டத்தில் இவரது காத்திரமான பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். “சாள்ஸ் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் அடுத்த நிலைத் தளபதியாக செயற்பட்டவர்.
உண்மையில் விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு வன்னிக்குள் மட்டுமல்ல, தென்னிலங்கையிலும் உலக நாடுகள் எங்கும் இயக்கிக்கொண்டிருப்பது அமைப்பின் சிறந்த புலனாய்வுக் கட்டமைப்பினால்தான். அதற்கு முக்கிய காரணமானவர்களில் சாள்சும் ஒருவர். சிலவேளைகளில் தாக்குதல் நடத்தபோகும் கரும்புலிகளுக்கு கூட இவரின் அறிமுகம் தெரிந்திருக்காது. கரும்புலிகளுக்கான திட்டத்தினை வேறு தளபதிகள்தான் வழிநடத்துவார்கள். இதனால், சாள்ஸ் பற்றி சாதாரண போராளிகளுக்கு கூட பெரிதாக தெரிந்திருந்ததில்லை.
இவ்வாறான செயற்பாட்டாளன் சாள்ஸ் அவர்களின் கால் படாத இடம் இலங்கையில் இல்லை என்றுதான் கூறவேண்டும். மட்டக்களப்பில் நின்றுகூட தனது தென்பகுதி நடவடிக்கையினை மேற்கொண்டவர். விடுதலைப் புலிகளின் கெரில்லா பாணியிலான நடவடிக்கைகள், மரபு வழியிலான நடவடிக்கைகள் என்று எல்லாவித தாக்குதல் நடவடிக்கையிலும் சாள்ஸ் அவர்களின் திட்டமிடல் இருக்கும். இதனால்தான் விடுதலைப் புலிகளின் புலனாய்வுதுறையின் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக அவரால் உயரமுடிந்தது.
அன்று, எமது விமானத் தளத்திற்கு தளபதிகள் அழைத்துவரப்பட்டிருந்தனர். அப்போது அங்குதலைவர் அவர்களும் நின்றிருந்தார். அதில் நானும் கலந்துகொண்டேன். எமது இயக்கத்தின் முதன்மைத் தளபதிகளுக்கு தலைவர் அவர்கள் விமானப் படையினை அறிமுகம் செய்து வைக்கின்றார். இதில் விமானப்படைப் பிரிவின் போராளிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் நான்கு, நான்கு பேராக விமானத்தில் பறப்பில் ஈடுபட்டார்கள். எமது பாதுகாப்பு படைப்பிரிவு விமானத் தளத்தின் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
விமானத்தின் வடிவத்தினையும் விமான ஓட்டிகளின் திறமையினையும் தலைவர் அவர்கள் தளபதிகளுக்கு எடுத்துரைத்தார். அதன்பின்புதான் தளபதிகள் அவர்களுடன் வந்தவர்கள் என்று நான்கு பேராக விமானத்தில் பறந்தார்கள். இரண்டு விமானங்கள் மாறிமாறி பறப்பில் ஈடுபட்டன.
அப்போது தலைவர் அவர்களும் விமானம் ஒன்றில் பறப்பதற்காக ஏறினார். தலைவர் அவர்கள் ஏறும்போது அவரது பாதுகாப்பிற்காக நானும் அதில் ஏறமுற்பட்டேன்.
அப்போது என்னை ஏறவிடாமல் தடுத்த தலைவர் அவர்கள், “பொட்டு நான் தனியப் போறன். பிறகு நீ போ. நான் போனால், நீ பார்” என்று கூறிவிட்டு விமானத்தில் ஏறி வன்னி வான் பரப்பில் வட்டமிட்டுவிட்டு கீழிறங்கினார்.
அப்போது அங்கு நின்றவர்களுக்கும் தலைவர் சொன்னதன் அர்த்தம் என்ன என்பது புரிந்திருந்தது. அதாவது விமானத்தில் தான் போகும்போது எதாவது நடந்தால், இயக்கத்தை நீ பார் என்றுதான் அர்த்தம். அதன் பின்தான் நான் பறப்பதற்கு சென்றேன். அப்போது
தளபதி சாள்ஸ்சும் நான் ஏறிய விமானத்தில் எனது பாதுகாப்பிற்காக ஏறினான். அப்போது தலைவர் அவர்கள் சாள்சை என்னுடன் ஏறவிடாமல் தடுத்தார்.
“உவங்கட ஓட்ட விமானங்களை நம்பி எல்லாரும் ஒண்டாய் பறக்கேலாது. முதல்ல அம்மான் போகட்டும். பிறகு நீ போ. ஏனெண்டால் அம்மான் இல்லாட்டிக்கு நீதான் புலனாய்வுத்துறையை கொண்டு நடத்த கூடியவன்” என்று கூறினார்.
அந்தளவிற்கு சாள்ஸ் திறமையானவாக இருந்தான். அதன்பின்பு பல தளதிகள் விமானத்தில் ஏறி பறப்பில் ஈடுபட்டார்கள்” என்றார். இவ்வாறு தளபதிகளுக்கு வான் படையினர் தொடர்பான அறிமுகம் நிகழ்ந்திருந்தது. ஆனால், அதன் பின்னர் 2007 மார்ச் 26ம் திகதியே தமிழீழ வான்படை கட்டுநாயக்கா மீது தனது முதற் தாக்குதலை நடத்தி உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது.
தமிழின வரலாற்றில் முதல் வான்படையை அமைத்த தலைவன் எனும் பெருமையும் தமிழீழத் தேசியத் தலைவருக்கு கிடைத்தது.
இந்தத் தாக்குதல் மூலம் வான் பாதுகாப்பு படையணி என்ற அமைப்புடன் இருந்த விடுதலைப் புலிகள், வான் தாக்குதல் படையணி என்ற புதிய பலத்தை பெற்றிருந்தனர். ஆனால், இத்தனை பலம் கொண்டிருந்த விடுதலைப் புலிகள், இரண்டு வருடங்களில் எவ்வாறு பலமிழந்து, செயலிழந்து போனார்கள்..?
முள்ளிவாய்க்காலில் இறுதி வரை நின்று போராடிய போராளியின் அனுபவப் பதிவு இது. பாதுகாப்பான தளம் ஒன்றை இவர் சென்றடையும் வரை இவரது விபரங்களை தவிர்த்துக்கொள்கின்றோம்.
(தொடரும்…)
நன்றி: ஈழமுரசு
கட்டளைக்காக காத்திருக்கும் தற்கொலைப் பேராளிகள்
வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் குறித்த தற்கொலைப் போராளிகள் மறைந்திருப்பதாகவும், சனநடமாட்டமிக்க பகுதிகளில் இவ்வாறு பதுங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு எத்தனை தற்கொலைப் போராளிகள் பதுங்கியுள்ளனர் என்பது குறித்த சரியான தகவல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது எனக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் சுமார் 20 தற்கொலை அங்கிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
தற்கொலைப் போராட்டங்களை முன்னெடுத்த சிரேஸ்ட தலைவர்கள் உள்ளிட்ட 100 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Saturday, September 26, 2009
செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு: சிறுவர்கள்,பெண்கள் உட்பட 6 பேர் காயம்
இச்சம்பவத்தினால் அந்த முகாமில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த 6 பேரும் முகாமிலிருந்து காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற போதே இராணுவத்தினர் சுற்றிவளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Friday, September 25, 2009
மஹிந்தவின் மதுபோதை
தென் மாகாண சபைக்காக கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சந்திம ராசபுத்திர உள்ளிட்ட ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமே டளஸ் அழகப்பெரும இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு மது வழங்கியமை தொடர்பாக ஜனாதிபதியின் பிரத்தியேக வைத்தியரான அஜித் ரணவக்க மீது குற்றஞ்சுமத்தியிருக்கும் டளஸ் அழகப்பெரும ஜனாதிபதி தனியாக மது அருந்துவது மிகவும் ஆபத்தானது எனவும் கூறியுள்ளார். இதற்கு முன்னர், தினமும் அதிகாலையில் உடற்பயிற்சிகளை செய்து மிகவும் உற்சாகமாக பணிகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதியின் உற்சாகம் தற்போது காணாமல் போய்வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு நெருக்கமான பௌத்த தேர்கள் சிலருக்கு அறிவித்து அவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு போதிப்பது மிகவும் பொருத்தமானது எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரையோ, எதிர்க்கட்சியில் உள்ள ஏனையவர்களையோ பகிரங்கமாக விமர்ச்சிக்காது அந்தப் பொறுப்பை தமக்கும், அமைச்சர்களான மேர்வின் சில்வா, ராஜித்த சேனாரத்ன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச ஆகியோரிடம் பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதி அந்தக் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாது எதிர்க்கட்சித் தலைவர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருவதால் ஜனாதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி வெளியிடும் சில கருத்துக்களை ஊடகப் பதிவுகளிலிருந்து நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைச் சாடியமை அதிலொரு உதாரணம் மாத்திரமே எனத் தெரிவித்துள்ள அமைச்சர் அழகப்பெரும, ஜனாதிபதியின் இந்த நிலைமைக்கு அவரது இரத்த அழுத்தமே காரணம் எனவும் கூறியுள்ளார்.
Sunday, September 20, 2009
ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தலுக்கான நாடகங்கள் இலங்கையில்....
போர் காரணமாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தி அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்துமாறு சிறிலங்கா அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் லைன் பாஸ்கோவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசுக்கு உதவியளிக்கும் எனவும் லைன் பாஸ்கோவே தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5:00 மணிக்கு இடம்பெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுப் பிரதி தலைவர் மாவை சேனாரதிராஜா, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் வில்லியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லைன் பாஸ்கோவேவுடன் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே மற்றும் ஐ.நா உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் லைன் பாஸ்கோவே தம்மிடம் கூறிய விடயங்கள் தொடர்பாக மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்,
"சிறிலங்கா அரசு அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குமானால் ஐக்கிய நாடுகள் சபை அதற்கு உதவியளிக்கும். மக்களை சொந்த இடங்களில் மீள குடியமர்த்தி அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் குறித்து அரச தலைவருக்கு எடுத்துக் கூறியுள்ளோம் என்று லைன் பாஸ்கோவே எம்மிடம் கூறினார்.
அத்துடன் ஜனவரி மாதத்திற்கு முன்னர் மக்களை மீள குடியமர்த்துவதாக அரச தலைவர் தம்மிடம் உறுதியளித்ததாகவும் லைன் பாஸ்கோவே எம்மிடம் தெரிவித்தார்.
மக்களை மீளக் குடியமர்த்தல் அரசியல் தீர்வு ஆகிய இரண்டு விடயங்கள் உட்ப சகல விடயங்களிலும் ஐக்கிய நாடுகள் சபை அரசுடன் பேசும் என்றும் லைன் பாஸ்கோவே உறுதியளித்தார்.
அரசு அரசியல் தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. இதுவரை காலமும் தமிழர்களின் அரசியல் வேட்கைகளை உள்ளடக்கி தீர்வு ஒன்றை முன்வைக்க விரும்பாத அரசு இனிமேலும் தீர்வை முன்வைக்கும் என எதிர்பாக்க முடியாது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் அரசு அதில் கவனம் செலுத்துகின்றதே தவிர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை.
அதன் காரணமாக அரசியல் தீர்வு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருகின்றது. அந்த தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதேவேளை இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துகின்ற நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை உதவிபுரிய வேண்டும். அரசு எவரையும் அனுமதிக்காது தாங்களே செய்து வருகின்றனர். இதனால் கால தாமதம் ஏற்படும்.
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள தொண்டு நிறுவனங்களின் உதவிகள் தேவை ஆனால் அரசு அதற்கு அனுமதி வழங்க மறுக்கின்றது.
எனவே ஐ.நா. அந்த விடயத்தில் கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும். கண்ணிவெடிகள் இல்லாத பிரதேசங்களில் கூட மக்கள் இன்னமும் குடியமர்த்தப்படவில்லை.
மழை காலம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லையானால் மக்கள் இன்னல்களை எதிர்நோக்குவார்கள். 180 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் இடம்பெறும் என அரசு இந்தியாவுக்கு உறுதியளித்திருந்தது.
அவ்வாறு உறுதியளித்து 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை. அங்குள்ள மக்களில் மிகவும் குறைந்தளவிலான மக்களே முகாமில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிலும் அனேகமானோர் வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் இடைத்தங்கள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள குடியமர்த்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கூட இன்னமும் பாதுகாப்பு தரப்பு அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் வவுனியா நலன்புரி முகாமில் உள்ள மக்களை அரசு துரிதமாக மீள குடியமர்த்தும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.
முகாம்களில் உள்ள மக்களை சென்று பார்வையிட்டு உதவிகளை வழங்குவதற்கு கூட அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கிவில்லை.
உண்மையில் அரசுக்கு அக்கறை இருக்குமானால் நல்ல அணுகுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் முகாம்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை செல்ல அனுமதித்து குடியேற்ற விடயங்களிலும் எங்களின் ஒத்துழைப்புக்களை பெற்று நல்லெண்ணத்தை அரசு வெளிப்படுத்த வேண்டும்.
ஆனால் அவ்வாறு எந்தவிதமான ஆரோக்கியமான முயற்சிகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை" என எடுத்துக் கூறியதாக மாவை சேனாதிராஜ தெரிவித்தார்.
இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை இடம்பெற்றது.
Saturday, September 19, 2009
தம்பலகாமத்தில் இராணுவத்தினருடன் நேரடி மோதல்! போராளிகள் இருவர் வீரச்சாவு
இந்த மோதலின் போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான லெப்.கேணல் பொழிலன் (சிவகுமார்), கப்டன் சசியன் (யோகரட்ணம் சசிகரன்) ஆகியோரே வீரச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயக விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றனர்.
வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றுவரும் அமைச்சர் மிலிந்தகொட
இலங்கையில் பிறந்து, அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் வர்த்தகர் ராஜ் ராஜரத்னம் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியிருப்பது குறித்த தகவல்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருப்பதாகவும், இதனை வெளியிடாதிருக்க பணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தே இந்தக் கப்பம் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கப்பப் பணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~, அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகியோரினால் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
தற்போது மிலிந்த மொரகொடவும், பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள் சிலரும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை வர்த்தகர்களிடம் கப்பம் கோரி வருவதாகத் தெரியவருகிறது.
குறித்த வர்த்தகர்கள், விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றத் தகவல்கள் இருப்பதாகக் கூறியுள்ளதுடன் அவற்றைப் பகிரங்கப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பணம் தரவேண்டுமெனவும் அழுத்தங்களைக் கொடுத்து கப்பம் பெற்றுவருகின்றனர்.
இவ்வாறு அச்சுறுத்தப்படும் வெளிநாடுகளில் இருக்கின்ற பல இலங்கை வர்த்தகர்கள் கறுப்புப் பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.
Friday, September 18, 2009
மெனிக் பாம் முகாமே உலகில் மிகப் பெரியது: ஐ.நா. அதிகாரி
இலங்கையின் வடபகுதியில் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுத் திரும்பிய பின்னர் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவே, இடம்பெயர்ந்த மக்கள் விரைவாக அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
முகாம்களில் நிலை மிகச் சிக்கலானதாகவும் நெருக்கம் மிக்கதாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில், இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு லைன் பாஸ்கோவே நேற்று வியாழக்கிழமை சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அங்குள்ள மக்களுடன் அவர்களின் விருப்பங்கள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் கோரிக்கையின் பேரில் அவர் தனது குழுவினருடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். "முகாம்களுடன் நாம் நெருங்கிச் செயற்பட தொடங்கியதில் இருந்து அங்கு என்னென்ன பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படுகின்றன என்பதைப் பற்றி பொதுச் செயலாளர் புரிந்து வைத்திருந்தார். எனது பயணம் இங்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பான தெளிவான புரிதலை எமக்குத் தந்துள்ளது" என்றார் லைன் பாஸ்கோவே.
இந்த முகாம்களின் நிலை ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றதா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காத லைன் பாஸ்கோவே, "இந்தப் பயணம் நாங்கள் எதை விரும்புகிறோம், எதை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இருந்தது" என்றார்.
லைன் பாஸ்கோவேவின் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் கலந்து கொண்டார். ஐ.நா. அதிகாரியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்கள் குறித்து அவர் விளக்கினார். "இடைத் தங்கல் முகாம்களில் இருந்து மக்களை வெளியே அனுப்புவது பற்றிய விடயமே மிக முக்கியமாக ஆராயப்பட்டது." என்றார் அவர்.
இலங்கையில் விரைவில் இடம்பெயர்ந்த மக்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள் என தாம் நம்புகிறார் எனவும் அவர் தெரிவித்தார். "180 நாட்கள் என்ற எமது எல்லைக்குள் நாம் குறிப்பிட்டளவு மக்களை மீளக்குடியமர்த்துவோம் என்ற உறுதிமொழியை இந்த 90 ஆவது நாளில் நான் தருகின்றேன். அதற்குத் தேவையான கட்டுமான உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. இருக்கின்றது" என்றார் ரோகித போகல்லாகம.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் பாஸ்கோவே நேற்று சந்திப்புக்களை நடத்தியிருந்தார். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் எதிர்க் கட்சியினரையும் தமிழ் அரசியல்வாதிகளையும் அவர் இன்று சந்தித்துப் பேச இருந்தார். எனினும் அரச தலைவருடனான பேச்சின் போது என்ன விவகாரங்கள் ஆராயப்படும் என அவர் தெரிவிக்கவில்லை.
Tuesday, September 15, 2009
சித்திரவதை அச்சம் காரணமாகவே ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெடுத்திட்டதாக யசிகரன் நீதிமன்றத்தில் அறிக்கை
பயங்கரவாதத் தடுப்புக் காவற்துறையினர் சிவில் உடையில் தன்னைத் தாக்கியதால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே தான் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட்டதாக அவர் தெரிவித்தார். காவற்துறையினர் சிலரை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். ஒரு வாரத்திற்கு மேலாக யசிகரன் தாக்குதலுக்குள்ளானார்.
சிங்கள மொழியில் எழுதப்பட்ட அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒப்பமிடுவதற்கு முன்னதாக யசிகரனுக்கு வாசித்துக் காட்டப்படவில்லை. இதில் கையொப்பமிடுவதால் ஏற்படக்கூடிய சட்டப்பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறப்படவில்லை. அத்துடன், யசிகரனுக்கு தமிழில் மட்டுமே பேசவும் புரிந்து கொள்ளவும் முடியும் என யசிகரனின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கு விசாரணை செய்த அரச தரப்பு சட்டவாதி, அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கின் போது ஏன் அவர் அந்த பயங்கரவாதத் தடுப்புக்; காவற்துறையினரின் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்று கேள்வியெழுப்பினார்.
தான் அந்நேரத்தில் அச்சமடைந்திருந்ததாகவும், அதேநேரத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிரதிவாதியாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக் காவற்துறைப் பொறுப்பதிகாரியின் பெயரைக் குறித்துக் காட்டியதாகவும் யசிகரன் இதன்போது தெரிவித்தார்.
சிங்கள மொழி தெரியாத அவர் அவருடைய சொந்த ஊரான மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வரும் போது அச்சம் கொள்ளவில்லையா என்ற இன்னொரு கேள்விக்குப் பதிலளித்த யசிகரன் தனக்கு கொழும்பில் பல நண்பர்கள் இருந்ததால் தான் இது குறித்து அதிகம் அச்சம் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
முன்னைய விசாரணையின் போது தான் சித்தரவதைக்குள்ளாக்கப்படுவது குறித்து நீதிபதியிடம் தெரிவித்த பின்னரும் தான் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர் விசாரணையின் போது கூறினார்.
வழக்கு விசாரணையின் போது யசிகரனின் மேற்சட்டையின் மேல் பொத்தான் திறந்திருந்தது. அவர் சித்திரவதையின் போது தனக்கு ஏற்பட்ட அடையாளத்தைக் காட்ட முற்பட்டார். எனினும் நீதிபதி அவ்வாறான அடையாளத்தைத் தன்னால் காணமுடியவில்லை என்று தெரிவித்தார். பின்னர் இது குறித்து குறிப்பிட்ட நீதிபதி யசிகரனின் இந்த நடவடிக்கை நீதிமன்றை அவமதிக்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
இதன்போது யசிகரன் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் யசிகரன் நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் அவ்வாறு செய்யவில்லை என்றும், சித்திரவதை தொடர்பான அடையாளத்தை காட்டும் முயற்சியின்போது அது இயல்பாக நிகழ்ந்தது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு தனது கட்சிக்காரரால் நீதிமன்றிற்கு ஏதாவது அவமதிப்பு நிகழ்ந்திருப்பின் அதற்காக தான் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வழக்கு சிங்கள மொழியிலேயே நடைபெற்றது. அவ்வப்போது ஆங்கிலமும் பயன்படுத்தப்பட்டது.
யசிகரனிடம் கேள்விகள் தொடுக்கப்பட்ட போது அவை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. எனினும் நேரடியாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக நீதிமன்றத்தை அவர் அவமதித்தாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட அவருக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படவில்லை. இதேவேளை யசிகரனுடன் ஆஜர்படுத்தப்பட்டிருந்த அவருடைய துணைவியான வளர்மதிக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் மொழி பெயர்ப்பு வழங்கப்படவில்லை
வழக்கு விசாரணை செப்ரம்பர் 22ம் திகதி ஒன்றரை மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Monday, September 14, 2009
மஹிந்தவினால் ஊடகவியலாளர்களுகு;கு அச்சுறுத்தல் - அமைச்சர் டளஸ் அழகப்பெரும
தெரன சிங்கள தொலைக்காட்சியின் ஷசிகுராத ரே| (வெள்ளிக்கிழமை இரவு) என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவினால், ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் நிலவிய காலத்தில் தானும் அவரால் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது ஊடகவியலாளர்கள் சுதந்திரம் கோரி கோ~மிட்டு வருவதைப் போன்று தானும் அக்காலத்தில் இவ்வாறு போராடியதாக அமைச்சர் கூறினார். ஊடகசுதந்திரத்தைக் கோ~மிட்டு வெற்றிகொள்ள முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சாகித்திய விழாவில் மஹிந்த ராஜபக்~ திடீரென ஆசனத்திலிருந்து திடீரென கீழே விழுந்தார்
முன்னதாக சம்பிரதாய முறைப்படி குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர சென்ற போது, ஜனாதிபதி திடீரென கீழே விழுந்துள்ளார். அவரது ஆசனம் பின்பக்கமாக சரிய உடனடியாக ஜனாதிபதி தூக்கிய அவரது
பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், வேறு ஒரு ஆசனத்தில் அமரச் செய்துள்ளனர். இந்த நிலையில், ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களிடம் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினரும், ஜனாதிபதி விழுந்த காட்சிகளை கத்தரிக்குமாறு கூறியுள்ளனர்.
சில தொலைக்காட்சிகளின் விடியோ நாடாக்களை கைப்பற்றிய ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர், நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோப் படங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.கலாசார அமைச்சின் செயலாளரினால் நடத்தப்பட்ட நன்றியுரையின் பின்னர், சிலருக்கு விருதுகளை வழங்கிய ஜனாதிபதி, உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜோதிடர் ஒருவர், ஜனாதிபதி தனது ஆசனத்தில் இருந்து விழுந்தமையானது அவரது வீழ்ச்சியை குறிப்பதாக அமைந்துள்ளது என கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற சனிப் பெயர்ச்சியானது ஜனாதிபதிக்கு பாதமான பலனங்களை ஏற்படுத்தும் என ஏற்கனவே ஜோதிடர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
Saturday, September 12, 2009
சொகுசு வாகனத்தில் ஏறிச்சென்ற ஜோர்ஜ் மற்றும் தயா மாஸ்டர்
கடந்த 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர், அரச தொலைக் காட்சியில் தோன்றி விடுதலைப் புலிகளே மக்களைத் தடுத்துவைத்திருந்தனர் எனவும் அவர்கள் மக்களைக் கொலைசெய்ததாகவும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அவர்கள் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறு கூறியதாக சில ஊடகங்கள் கருத்துவெளியிட்டு தமிழ் மக்களை சாந்தப்படுத்தியது.
இன்டர் கூலர் போன்ற சொகுசு வாகனங்கள் சுமார் 1கோடி ரூபாய் பெறுமதியானவை, அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் பயணிக்கும் இந்த வாகனம் யாருக்குச் சொந்தமானது என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சொகுசு வாகனத்தை அனுப்பியது யார், மற்றும் பல விடுதலைப் புலி முக்கிய உறுப்பினர்கள் தடுப்புக்காவலில் இருக்கின்றபோது இவர்கள் மட்டும் ஏன் விடுதலையானார்கள் என்பதில் பல சிக்கலான சந்தேகங்கள் நிலவுகிறது.
அரசுடன் இணைந்து இவர்கள் செயல்ப்படவுள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ள நிலையில் பொறுத்திருந்துதான் நாம் பார்க்கவேண்டும்.
Wednesday, September 9, 2009
புதிய சர்ச்சையில் ஹர்பஜன்-போட்டோகிராபரை தாக்கினார்
இந்திய கிரிக்கெட்டின் சர்ச்சை நாயகன் என்றால் அது ஹர்பஜன் தான். ஆஸ்திரேலிய வீரர் சைமன்ட்ஸை குரங்கு என திட்டியது, சக வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் பளார் என அறைவிட்டது என சொல்லி கொண்டே போகலாம்.
இந்நிலையில் இன்று புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெங்களூரில் இருந்து விமானம் [^] மூலம் கொழும்பு செல்ல கிளம்பி கொண்டிருந்தார்.
அப்போது யுஎன்ஐ கேமராமேன் ஒருவரின் கேமரா லென்ஸ் ஹர்பஜன் மீது இடித்துவிட்டது. இதையடு்தது கோபமடைந்த ஹர்பஜன் அந்த நிருபரின் முகத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
பொட்டு அம்மான் கொல்லப்பட்டதை உறுதிசெய்ய முடியவில்லையென பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
பாதுகாப்பு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த விசேட அறிக்கையை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்கவிடம் நேற்று கையளித்தார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இதனைச் சமர்ப்பித்துள்ளார்.
லக்ஸ்மன் கதிர்காமர் கொலைச் சம்பவத்தின் பிரதான பிரதிவாதிகளாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதுகாப்பு அமைச்சினால் விசேட அறிக்கையொன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த மே மாதம் 19ம் திகதி நந்திக்கடல் களப்பிற்கு அருகில் கொல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு மீட்கப்பட்ட சடலம் பிரபாகரனுடையது என அடையாளம் காணப்பட்டதாகவும், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனியின் உடலில் இருந்து பெறப்பட்ட மரபணுவில் இருந்து அதனை உறுதிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொட்டு அம்மான் அல்லது சிவசங்கர் என்ற பிரதிவாதியும், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலரும் நந்திக்கடல் களப்பு பிரதேசத்தில் மே மாதம் 18ம் திகதி அதிகாலை 4 மணியளிவல் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொட்டு அம்மான் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், மீட்கப்பட்ட சடலம் பொட்டு அம்மானின் சடலமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை சம்பந்தமாக எதிர்ப்புகள் இருக்கின்றதா என நீதிபதி பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம் கேட்டுள்ளார்.
சாதாரணமாக இவ்வாறான வழக்கொன்றின் போது, மரணச் சான்றிதழ் குறைந்தபட்ச ஆவணமாக சமர்ப்பிக்கப்படும் என்ற போதிலும் பாதுகாப்பு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமாயின் அதற்குத் தாம் எதிர்ப்பை வெளியிடப் போவதில்லையென பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கதிர்காமர் கொலை தொடர்பான வழக்கை எதிர்வரும் 12ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது என நீதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன், பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்களை பிரதிவாதிகள் பட்டியலிலிருந்து நீக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
Tuesday, September 8, 2009
வவுனியா முகாம் சேற்றுத் தரையில் சக்தி இழந்து துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்!
கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட அவர்களுக்கு மருந்து ஏற்றப்படும் நிலையில் தரையில் படுத்திருப்பதை இந்த காணொலி உறுதிப்படுத்துகின்றது. வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் இலையான்களை விரட்டுவதற்குக் கூட முடியாதவராக மண் தரையில் படுத்துக்கடப்பதை இதில் காண முடிகின்றது.
வவுனியாவில் உள்ள முகாம்களில் செல்லிடப்பேசி கமராவை பயன்படுத்தி இந்த காணொலி இரண்டு வார காலத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மழை காலம் தொடங்கியிருப்பதால் இந்த முகாம்களின் நிலைமை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஒரு நிலையில் இந்த காணொலி வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.
Monday, September 7, 2009
பொட்டம்மான், சூசையுடன் தப்பிச் சென்று விட்டார் என்ற சந்தேகம் இன்னமும் நிலவுவதாலேயே இம்மரனச்சான்ற்ரிதல்களை வழங்குவதில் இலங்கை தயக்கம்
தடுப்பு முகாம் மக்களுக்கு அழுக்கு ஆடைகளை வழங்கிய புலம்பெயர் சிங்களவர்
தெரிவித்துள்ளனர். மாற்றுத்துணியின்றித் தவிக்கும் மக்கள் ஆவலாக வணங்கா மண் பொருட்கள் வந்துவிட்டதா ? எனக் கூடியுள்ளனர். பின்னர் தான் அது வெளிநாட்டில் உள்ள
சிங்களவர் சிலரால் இந்த ஆடைகள் சேகரிக்கப்பட்டு கடுகதியாக கொழும்புகொண்டுவரப்பட்டு பின்னர் அவை வலயம் 4 முகாம் மக்களுக்கு வழங்கப்படுவது தெரிந்தது.
பெறப்பட்ட உடுப்புகளை மக்கள் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியானார்கள், பழுதாகிய உடுப்பு, சில கிளிந்த நிலையில் உள்ள உடுப்பு மற்றும் அழுக்கு உடுப்புகளையே இந்தச் சிங்களவர்கள் கொன்டுவந்து தந்ததை உணர்ந்த மக்கள் ஆத்திரமுற்றனர், சிலர் மனவேதனை அடைந்தனர். எமது நிலை இவ்வளவு கேவலமாகப் போய்விட்டதே எனச் சிலர் கண்ணீர் வடித்துள்ளனர். இருப்பினும் இந்த உடுப்புக்களை எரிக்கவேண்டும் எனச் சில இளைஞர்கள் முற்பட்டதால் முகாமில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இன் நிலையில் வரிசையில் சரியாக வரவில்லை என ஒரு முதியவரை, வயாதானவர் என்று கூடப் பாராமல் இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். நாம் இது தொடர்பாக வலயம் 4 ல் உள்ள ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்ட நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.
Sunday, September 6, 2009
இலங்கை இனப்படுகொலையை தோலுரிக்கும் ‘தமிழ் விடோ’
படுகொலைகளையும், மனிதாபிமானமற்ற கொடூரங்களையும் உலகிற்கு அம்பலப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது
” தமிழ் விடோ ” ( Tamil widow - தமிழ் விதவை ) என்ற திரைப்படம் ! அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் தமிழ்செல்வம், இலங்கையில் முள்வேலிக்குள் அகதியாய் தவித்துக்கொண்டிருக்கும் தனது 80 வயது தாய் - தந்தையரை மீட்டு
தன்னுடன் அமெரிக்கா அழைத்து வருவதற்காக தனது மனைவி மேரியுடன் இலங்கை செல்கிறார். தாம் நிகழ்த்தும் இனப்படுகொலைகளையும்,மனித உரிமை மீறல்களையும் உலக நாடுகள் கண்டும், காணாமல் இன்னும் தம்மை தொடர்ந்து ஆதரிக்கும் தைரியத்தில்,தமது பெற்றோரை மீட்கும் முயற்சிக்கும் தமிழ்செல்வத்தை,
அவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக படுகொலை செய்கிறது இலங்கை படை! தனது கணவரின் படுகொலையை நேரில் கண்டு பதறித் துடிக்கும் மேரி, இலங்கையின் தமிழருக்கு எதிரான இந்த இனப்படுகொலைகள் மற்றும் அனைத்து விதமான மனிதாபிமானமற்ற கொடூரங்களையும், உலகின் சக்திவாய்ந்த நாடுகளும், அதன் தலைவர்களும் எவ்வாறு கண்டும் காணாமல் உள்ளனர் என்பதை அம்பலப்படுத்த முயற்சிக்கிறார்
மேரி. இலங்கைத் தமிழர்களை, அவர்கள் தமிழனாய் பிறந்த ஒரே காரணத்திற்காக இலங்கை அரசும், அதன் படைகளும் இனவெறி கொண்டு தமிழர்களை எவ்வாறு இனப்படுகொலை செய்கிறது என்பதை பார்ப்பவர்களின் கண்களிலும், இதயத்திலும் ரத்தம் கசிய வைக்கும் விதமாக காட்சிப்படுத்துகிறது இத்திரைப்படம்.ஐ.நா. மூத்த அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அரசு திடீர் உத்தரவு
இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் உடனடியாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படாத போதிலும், வவுனியா முகாம்களில் உள்ள சிறுவர்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் சீற்றத்தை ஏற்படுத்தியதையடுத்தே இவ்வாறான அதிரடி நடவடிக்கையில் சிறிலங்கா அரசு இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) ஒரு மூத்த அதிகாரியான ஜேம்ஸ் எல்டர் என்பரே இரு வார காலத்துக்குள் சிறிலங்காவை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் வரையில் சிறிலங்காவில் பணிபுரிவதற்கு இவருக்கு 'விசா' உள்ள போதிலும், இந்தத் திடீர் உத்தரவை சிறிலங்கா அரசு பிறப்பித்திருக்கின்றது.
இராஜதந்திர தகுதியுடன் கூடிய ஐ.நா. கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அரசினால் கேட்டுக்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறுமாறே இவருக்கு முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் குறிப்பிட்ட ஐ.நா. அதிகாரி கேட்டுக்கொண்டதாலேயே இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெளியேற்றத்துக்கான காரணம் எதுவும் சிறிலங்கா அரசினால் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், குறிப்பாக அங்குள்ள சிறுவர்களின் நிலை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அடிக்கடி கருத்துக்களைத் தெரிவிப்பதாலேயே இந்த முடிவை சிறிலங்கா அரசு எடுத்திருக்க வேண்டும் என தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறிலங்காவுக்கான யுனிசெஃப்பின் அலுவலகத்தில் தகவல் தொடர்பு பிரதான அதிகாரியாக ஜேம்ஸ் எல்டர் பணிபுரிந்து வருகின்றார். இவர் அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேம்ஸ் எல்டரின் விசா காலாவதியாகிவிட்டது எனவும், அவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகாரச் செயலாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் கலாநிதி பாலித கோகன தெரிவித்தார்.
"இது நாடு கடத்தல் அல்ல. இது குடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையே இது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும் ஜேம்ஸ் எல்டரின் விசாவை இரத்துச் செய்யுமாறு குடிவரவுத் திணைக்களப் பணிப்பாளர் பீ.பி.அபயக்கோனுக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகின்றது.
சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக நியூயோக்கில் உள்ள யுனிசெஃப் தலைமையக அதிகாரி ஒருவர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் நியூயோர்க்கில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Saturday, September 5, 2009
ஜே.ஆர்.இன் வீட்டில் பேரன்
இந்த வீட்டில் முன்னாள் ஜனாதிபதியின் பேரனான அம்ரிக் ஜயவர்தன தற்போது வசித்து வருகிறார். கொழும்பு 07, க்ரேகரி வீதியில் இலக்கம் 1ஃ42 என்ற இடத்தில் அம்ரிக்கின் சொந்த வீடு இருந்த போதிலும், தமது பேரின் அவரது வீட்டில் இருக்க வேண்டும் என்ற தாத்தாவின் இறுதி ஆசைக்கமையவும், குடும்பத்தாரின் விருப்பதற்கமையவுமே தற்போதைய வீட்டில் வசித்து வருவதாக அம்ரிக் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சொந்தமாக வேண்டிய இந்த வீட்டின் பெறுமதி சுமார் 100 கோடி ரூபா எனத் தெரியவருகிறது.
மஹிந்தவின் இரகசிய மாளிகை
லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துடன் இந்த இரகசிய மாளிகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் இந்த இரகசிய மாளிகை, அவரது சகோதரியான காந்தினிக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகிலேயே நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. தெனியாய, பெபரேலிய பிரதேசத்தில் மிகவும் அழகான இடமொன்றில் அமைக்கப்படும் இந்த மாளிகையின் நிர்மாணப் பணிகள் பிரபல வாஸ்துசாஸ்திர நிபுணரான சந்தனதாஸ் வத்தவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கமநெகும திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாத்திரமல்லாது, அரசாங்கத்தின் ஏனைய வாகனங்களையும் பயன்படுத்தி இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், இவ்வாறு அமைக்கப்பட்டு வருவது என்ன என்பது குறித்து கேள்வியாகவே இருந்ததாகவும், கடந்த காலங்களில் இந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் இவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டுவரும் இந்த இரகசிய மாளிகை தொடர்பான தகவல்களைச் சேகரிக்க சென்ற போதே லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனியார் காணியொன்றிற்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று ஊடகவியலாளர்களையும் கைதுசெய்த காவல்துறையினர் மொரவக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுத்துக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொண்டு கொழும்பு அழைத்துவந்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Friday, September 4, 2009
ராம் மற்றும் நகுலன் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட விடயம் வெளியிடப்படாததன் காரணமாக பிடிபட்ட கே.பி.
இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத்துறையின் ஒருங்கிணைந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலொன்றில் ஓகஸ்ட் 06ம் திகதி கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானது என தேசிய புலனாய்வுத்துறையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தகவல் தருகையில், ஷமலேசியா விசேடக் குழு| அதிகாரிகளே கே.பி.யைக் கைதுசெய்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் கூறினார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கே.பி. தற்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹேன்தா விதாரணவின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மலேசிய விசேடக் குழுவினால் கைதுசெய்யும் பாரிய திட்டத்திற்கு மலேசியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா பெரும் பங்கெடுப்பை மேற்கொண்டுள்ளார்.
மலேசியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் மலேசியாவில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரலாயத்திற்கு அனுப்பப்பட்ட மேஜர் ஜெனரல் உதய பெரேரா, தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளார்.
உதய பெரேரா மலேசியாவில் பணியமர்த்தப்பட்ட நாள் முதல், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கண்காணித்து அதுகுறித்து மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுப் பிரவினர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கே.பி. போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் மலேசியாவில் வாழ்வது, அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என உதய பெரேரா தொடர்ந்தும் மலேசிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையிலேயே கே.பி. குறித்து அதிகூடிய கவனம் செலுத்த மலேசிய விசேடக் குழு ஆரம்பித்துள்ளது.
அதன்பின்னர், கே.பியை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரச தலைவர் மட்டத்தில் மலேசிய தலைவர்களிடம் வேண்டுகோளொன்றை விடுக்குமாறு அதிகாரிகள் பிரதி உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், ஜூலை மாத இறுதியில், சிங்கப்ப+ரில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் விசேட கூட்டத்தின் போது, கே.பி.யை கைதுசெய்து இலங்கையிடம் கையளிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மலேசிய வெளிவிவகார அமைச்சரிடம் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராஜதந்திர ரீதியாக இரு நாடுகளுக்குமிடையே இவ்வாறான இணக்கப்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கே.பி. மலேசியா சென்றிருந்ததை இலங்கையின் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் கே.பி. தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதன் மூலமே கே.பி மலேசியா சென்றமையை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட விடயம் வெளியிடப்படாததன் காரணமாக கே.பி.யும் இதுகுறித்து அறியாதிருந்துள்ளார். இதன் காரணமாகவே, கே.பி. இவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கே.பி.யின் செய்மதி தொலைபேசி இலக்கத்தைத் பெற்றுக்கொண்ட பாதுகாப்புத் தரப்பினர், இதுகுறித்து ஆராயுமாறு அமெரிக்க மற்றும் மலேசிய தொலைத்தொடர்பு நிபுணர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, கே.பி. செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி, மலேசியாவிலிருந்தே வழங்கப்பட்டதை ஆளுடீ அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இந்தத் தகவல்களுக்கமைய கே.பி. தங்கியிருந்த, மலேசிய தலைநகர் கோலாலம்ப+ரில் உள்ள ஷரிய+ன்| விடுதியை முற்றுகையிட்ட அதிகாரிகள், கே.பி.யின் சாரதி ஷஅப்பு|வை கைதுசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கே.பி. வேறிருவருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதற்கிடையே, ஆளுடீ அதிகாரிகள் ஷஅவசரமாக ஒருமுறை வெளியே வாருங்கள்| என ஷஅப்பு|வைப் பயன்படுத்தி கே.பி.யின் தொலைபேசிக்கு தகவலொன்றை வழங்கிப்பட்டதை அடுது;து விடுதியைவிட்டு வெளியே சென்ற கே.பி. கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த முற்றுகையின் போது எந்தவொரு இலங்கை பாதுகாப்பு அதிகாரியும் பங்கேற்கவில்லை. கே.பி. கைதுசெய்யப்பட்டதை அடுத்து அதிகாரிகள் இதுகுறித்து பிரதி உயர்ஸ்தானிகருக்கு தகவலளித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடியதன் பின்னர், தாய்லாந்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கே.பி.யை ஒப்படைப்பதென இணக்கம் காணப்பட்டது.
இதுதொடர்பாக தாய்லாந்து அரசாங்கத்திற்கு தகவலளித்துள்ள மலேசிய பாதுகாப்புத் தரப்பினர், இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் சந்தேக நபரொருவரை பாங்கொக் விமான நிலையத்தில் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளனர். குறித்த சந்தேக நபர் கே.பி. என தாய்லாந்து அரசாங்கத்திடம் இனங்காட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் இணக்கம் கண்டுள்ளனர்.
இதனடிப்படையில், ஓகஸ்ட் 6ம் திகதி, இலங்கை விமானப்படையினரால் பயன்படுத்தப்படும் விமானமொன்றின் மூலம் பாங்கொக் விமான நிலையத்திற்குச் சென்ற இலங்கையின் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலர் எவ்விதத் தடங்கல்களும் இன்றி கே.பி.யை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கே.பி.யிடம் தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்டதைப்போன்று கே.பி. ஒரு பெரிய தலைவர் அல்லவெனவும், அவர் அறிந்திருக்கும் தகவல்கள் வரையறையானவை எனவும் எமது இணையத்தளத்திற்கு தகவலளித்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Thursday, September 3, 2009
ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை களமிறக்குவது தொடர்பாக ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியொருவரை வேட்பாளராக நிறுத்தாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என ஜே.வி.பி.யினால் உத்தியோகப+ர்வமற்ற வகையில் கிடைத்துள்ள யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைத்துவத்தின் இணக்கம் கிடைத்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் முன்னாள் சிவில் சேவை அதிகாரியொருவர் குறித்தும் தற்போது எதிர்க்கட்சிக் கூட்டமைப்பின் தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எண்ணியிருந்த கரு ஜயசூரிய, எஸ்.பீ.திஸாநாயக்க ஆகியோர் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. பிரதிநிதிகளுக்கிடையே இவ்வாறு உத்தியோகப+ர்வமற்ற பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.யி.னால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர்கள் மூன்று பேரில் யாரைத் தேர்தலில் களமிறக்குவது தொடர்பான தீர்க்கமான இணக்கம் வெளியிடப்படவில்லை.
Tuesday, September 1, 2009
தமிழ் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு?
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (31) திஸ்ஸநாயகத்திற்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து வெளிவிவகார அமைச்சருக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணமுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிகார அமைச்சிற்கு நூற்றுக்கணக்கான தொலைநகல்கள் (ஃபெக்ஸ்) வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
லிபியாவின் 40வது சுதந்திரத் தின விழாவில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர், திஸ்ஸநாயகம் வழக்கின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து விரவாக கலந்துரையாடியுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க வழிசெய்யுமாறு சர்வதேச அமைப்புக்கள் கோரியுள்ளமை குறித்து ஆராயப்படுவதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு இது வழிவகுக்கும் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.