Wednesday, March 11, 2009

பிரித்தானியாவில் இருந்து ஈழ தமிழர்களுகாக ஒப்பரேஷன் "வணங்கா மண்"

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் "வணங்கா மண்" எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.
இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் "வணங்கா மண்" என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் தமிழ் மக்களிடம் கோரி நிற்கின்றனர்.
பிரித்தானியாவின் பல பாகங்களில் உணவு சேமிப்பு நிலையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளது. இங்கு உலர் உணவுப்பொருட்களை மக்கள் சென்று வழங்கமுடியும். உடைகள் மற்றும் இலங்கைத் தயாரிப்பான உணவு வகைகளை தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலை நிவாரண கப்பல் என்று கூறாது "வணங்கா மண்" என பெயரிட்டதன் காரணம், உலகநாடுகளால் புறக்கணிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் கொடூரமான எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதலுக்கு உள்ளாகி, மிகமோசமான உணவு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உலகில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தும், சிங்கள இனவாதிகளுக்கு தலைவணங்காது நிற்கும் எம் தமிழ் மக்களுக்காக எம்மவர்களால் அனுப்பப்படும் கப்பல் என்பதாலாகும்.
புலம் பெயர் வாழ் தமிழர்களே! விரைந்து செயல்பட்டு உணவுகளை வழங்குங்கள். இந்த கப்பலை வெற்றியாக முல்லை துறைமுகத்திற்கு கொண்டுசெல்ல ஏற்பாட்டாளர்களோடு தோளோடு தோள் நின்று உதவுங்கள், என நாம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.
இச் சந்தர்ப்பத்தை தவறவிடின் இனி எச் சந்தர்ப்பத்தில் நாம் வன்னி மக்களை காக்கப் போகிறோம்...!
"வணங்கா மண்" கப்பல் ஒரு வீரப்பயணம்.

No comments:

Post a Comment