Tuesday, March 3, 2009

வான்கரும்புலியை அடையாளம் கண்டு சாதனை படைத்த ஸ்ரீ லங்கா

கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது வான் தாக்குதல் நடத்த வந்த விடுதலைப் புலிகளின் விமானி தொடர்பாக நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்திற்கு வெளியே அண்மையில் விடுதலைப் புலிகளின் விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணை நேற்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.
இதன் போது அங்கு இருவர் சாட்சியமளித்தனர். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இருவரது விபரங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும், தற்போது நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருக்கும் புலிகளின் விமானியின் உடலைப் பார்வையிட்ட பின்னரே உடலை அடையாளம் காட்டினர்.
இந்த விமானத் தாக்குதலின் பின்னர் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் புலிகளின் தலைவரின் இடப்பக்கமாக இருந்தவரது உடலும் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருப்பவரது உடலும் ஒன்றென அவர்கள் கூறியிருந்தனர்.
அத்துடன் இவர் அச்சுவேலி இடைக்காடு பகுதியைச் சேர்ந்த முருகப்பிள்ளை சிவரூபன் (வயது 32) என்றும் தெரிவித்தனர்.
இவரது தந்தை இறந்து விட்டதாகவும் இவருக்கு இரு சகோதரிகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இவர் புலிகளின் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து இறந்தவரது உடலை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment