Tuesday, March 10, 2009

முகமாலை, கிளாலி, பளை நோக்கி விடுதலைப்புலிகள் எறிகணை வீச்சு

முகமாலை, கிளாலி, பளை ஆகிய பகுதிகளை நோக்கி தமிழீழ விடுதலைப்புலிகள் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அகோர எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளதாக தென்மராட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் கிளாலி, விடத்தற்பளை, உசன் பகுதி மக்களிடையே பெரும் பதற்ற நிலை காணப்படுவதாகவும் ஏ9 வீதியை இலக்கு வைத்தே இந்த எறிகணை வீச்சு இடம்பெற்றதாகவும் அறிய வருகிறது.
இச் சம்பவத்தில் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏதும் ஏற்படாத போதும் ஏ9 வீதியில் இராணுவத்தின் வாகனத் தொடரணி பயணித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இச் சம்பவத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து எதுவும் தெரியவரவில்லை.

No comments:

Post a Comment