Sunday, March 14, 2010

வடக்கில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் சுயதணிக்கை

வடபகுதி மக்களினதும் தமதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என யாழ்ப்பாண பத்திரிகை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கிலிருந்து சென்ற ஊடகவியலாளர் குழுவொன்றுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் கோனார் மயில்நாதன் தற்போதைய யாழ்ப்பாண நகரத்திற்குள் காணப்படுவது விசித்திரம் மாத்திரமே, கிராமப்புறங்களில் இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கிறது என்ற முடிவுக்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறும் நடைமுறை தொடர்ந்தும் இருப்பதாகவும் இது யாழ்ப்பாண மக்களின் கருத்து கூறும் சுதந்திரத்தையும், தகவல் அறியும் உரிமைக்கும் பாரிய தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கின் வசந்தத்தின் மூலம் வடபகுதிக்கு எவ்வித அபிவிருத்தியும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாண பத்திரிகை ஆசிரியர்கள் தொடர்ந்தும் கருத்துக்களை வெளியிட முடியாது சுய தணிக்கைக்குள் சிக்கியிருப்பதாகவும் மயில் நாதன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடபகுதி மக்களுக்கும் அடிப்படையாகத் தேவைப்படுவது சுதந்திரமும், தமது கலாசாரத்தின்படி வாழ்வதற்கான உரிமைகளே அன்றி தேர்தலுக்குத் தேர்தல் அரசியல்வாதிகளைத் தெரிவுசெய்யும் உரிமையல்ல என வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் விஜேசுந்தரம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment