த நேசன் பத்திரிகைகளின் பாதுகாப்புச் செய்தியாளரான ருவான் வீரகோன் மற்றும் சியத்த பத்திரிகையின் ஆசிரியர் பிரசன்ன பொன்சேக்கா ஆகியோரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் வெகு நீண்டகாலமாக ஜெனரல் சரத் பொன்சேக்காவுடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளதால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என பயங்கரவாத விசாரணைப் பிரிவின் மூத்த அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
ருவன் வீரகோன் மாத்திரமல்லாது பிரசன்ன பொன்சேக்காவும் மாவிலாற்றில் ஆரம்பமான நான்காவது ஈழ யுத்தம் நிறைவடையும் வரை போர்க் களத்திலிருந்து செய்திகளை வெளியிட்டுவந்த ஊடகவியலாளர்களாவர்.
பிரசன்ன பொன்சேக்கா அப்போது லேக் அவுஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படும் சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். இதனைத் தவிர, ஜெனரல் சரத் பொன்சேக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த மேலும் சில ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment