Wednesday, March 31, 2010

புங்குடுதீவு பெண்களின் குடுமி சண்டையால் அதிர்ந்து போன சுவிஸ் பொலிஸ் : திருமண விழாவில் சம்பவம்

நம்மட நாட்டில சண்டை இப்பொழுது ஓய்ந்து விட்டது. ஆனால் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே நடக்கின்ற சண்டைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குடும்ப சண்டையிலிருந்து, பிரதேசம், குழு, ஊர், வட்டாரம், சாதி, என ஒருவருக்கொருவர் பகைமை காட்டி, பழைய கோபதாபங்கள், நானா, நீயா பெரியவர், சின்னவர் என பழைய பஞ்சாங்க கதைகள் பேசி, கங்கணம் கட்டிக் கொண்டு புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும் போது வெட்கப்பட வேண்டிய விடயம். ஆனால் இந்த சண்டைகள் அடுத்த சந்ததிவரை தொடரும் போல் உள்ளது. சுவிஸ் நாட்டில் ‘அறோ” கன்ரோன் என்ற இடத்தில் புங்குடுதீவு மக்களின் கல்யாணவீட்டு நிகழ்ச்சியொன்றில்; நடந்த சண்டையோ மிகவும் எம்மவர்களை அதிர்சியடைய வைத்தது. இப்படியொரு சண்டைக் காட்சியை சுவிஸ் பொலிஸ்காரர்களே சரித்திரத்தில் சந்தித்திருக்க மாட்டார்கள். கிட்டதட்ட 60க்கு மேற்பட்ட பொலிசாரும், 3அம்புலன்சு வண்டிகளும் சுவிஸ் பத்திரிகை நிருபர்களும் அங்கு நடந்த சண்டையில் பிரசன்னமாகியிருந்தார்கள் என்றால் நீங்களே கற்பணை பண்ணி பாருங்கள் இந்த சண்டையானது எப்படி நடந்திருக்கும் என்று..

புங்குடுதீவை சேர்ந்த, அதுவும் ஒரே சொந்தக்காரக் குடும்பத்தை சேர்ந்த இரு வீட்டாரின் கல்யாணவீட்டு நிகழ்சியில் தான் இந்த கைகலப்பு நடந்திருக்கிறது. முன்பு 83,85களில் சுவிஸில் புங்குடுதீவார்; யாழ்பாணத்தார் என்று சண்டை பிடித்தார்கள். பின்பு படிப்படியாக கல்யாணம் கட்டி பிள்ளை குட்டி என்று வந்தவுடன் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார்கள். அதுமட்டும் காரணமல்ல அன்றைய நேரத்தில் சுவிஸ் பொலிசாரின் கட்டுப்பாடுகள் மிகவும் சாந்தமாக இருந்தது ஆனால் இன்றோ அயல் நாட்டவரின் மீது சுவிஸ் பொலிசாரின் சட்டதிட்டங்கள் கடுமையாகப்பட்டுள்ளதால் நம்மவர்கள் இப்பொழுது அடக்கி வாசிக்கிறார்கள்.

இப்ப நமது நாட்டில சண்டை முடிந்து போனதால அதன் தொடர்ச்சியாக இங்கே தொடங்கி விட்டார்கள் போல்தான் தென்படுகிறது. நேற்றைய தினம் நடந்த சண்டையானது சிங்களவனுக்கோ தமிழனுக்கோ அல்லது யூகோகாரர்களிற்கும் இடையில் நடந்த சண்டையல்ல. ஒரே ஊர்காரர்களிற்கிடையில் (புங்குடுதீவு) ஒரே வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அதுவும் சொந்தகாரர்களின் கல்யாண வீட்டில் கலந்து கொள்ள வந்த ஒரே சகோதர குடும்பத்தை சேர்ந்தவர்களிற்கிடையில் நடந்த சண்டையாகும்.

நோர்மலாக கல்யாண வீடு, சாமத்திய வீடு, பிறந்தநாள் வீடு போன்ற நிகழ்சிகளில் ஆம்பிளைகள் நல்லா குடித்து போட்டு அவர்களின் வீரத்தை காட்டுவார்கள் அது வழமையானது தான். இப்பொழுதெல்லாம் கல்யாணவீடு போன்ற நிகழ்சிகளிற்கு குடிப்பதற்கு யூஸ் போத்தில் வாங்குவதை விட விஸ்கி போத்தில்கள் தான் கூடுதலாக வாங்குகிறார்கள்.

நேற்று நடைபெற்ற சண்டையோ ‘மது” போதையால் வந்த சண்டையல்ல மாறாக ‘மாதுக்களால்” வந்த சண்டையாகும். இந்த சண்டையோ மிகவும் சுவாரிசமான சண்டையாகும். ஏன்எனில் அங்கு நின்ற ஆம்பிளைகளும் ஆம்பிளைகளும் எதிர்த்து சண்டை பிடித்தார்களாம், பொம்பிளைகளும் பொம்பிளைகளும் எதிர்த்து சண்டை பிடித்தார்களாம். இதில் என்ன விசேசமான விடயம் என்றால் நீங்கள் நினைப்பது போல் பொம்பிளைகளும் பொம்பிளைகளுக்கும் இடையில் நடந்த சண்டை வெறும் வாய் சண்டையல்ல. பொம்பிளைகள் முதலில் கடும் சுத்தமான (தூசணம்) நல்ல தமிழில் வாய் சண்டையை தொடங்கினவையாம் தீடீரென கைகலப்புக்கு மாறி, கட்டியிருந்த சாறிகளையும் ஆளுக்கு ஆள் பிடித்து இழுத்து நின்று அடிபட்டவையாம். அங்கு நின்றிருந்த அமைதியான பெண்கள் (நூற்றுக்கு மேற்பட்ட), இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளும் மிகவும் பயந்து போய் யாபேரும் ஐயோ, ஐயோ எனக் குளறிக் கூக்கிரலிட்டு ஓரே நேரத்தில் பொலிசுக்கு ரெலிபோன் செய்தார்களாம்.

கல்யாணவீட்டு மண்டபத்துக்கு பக்கத்திலிருந்த சிறிய பொலிஸ் நிலையத்தார் ஓரேநேரத்தில் இவ்வளவுபேர் அழுதுகுளறி ரெலிபோன் செய்ததால் அவர்கள் சரியாக பயந்துபோய் அந்த மாநிலம் முழுவதும் தகவல் அனுப்பி கிட்டதட்ட 10-20 கார்களில் கல்யாண மண்டபம் நோக்கி விரைந்து வந்துதானாம் கலவரத்தை அடக்கியவர்கள்.

பொம்பிளைகள் போட்ட சண்டையை (அந்த கண்கொள்ளா காட்சியை) கலகம் அடக்க வந்த பொலிஸ்காரர்களோ கண்டு அதிசயத்து போனாங்களாம். பொலிசார் வந்த பிறகும் பெண்டுகள் சண்டையை நிறுத்தவில்லையாம். சில பொம்பிளையளை பொலிஸ்காரர் அவர்களின் கைகளை பின்னால் பிடித்து கைவிலங்கு போட்டு ஒரு மூலையில் கொண்டு போய் கடுமையாக எச்சரிகை செய்து இருத்திய பிறகுதானாம் பொம்பிளைகளின் சண்டை அடங்கியது. சுவிஸில் முதல்முறையாக தமிழ் பெண்களுக்கு பொலிசார் கைவிலங்கு போட்டதை இந்த நிகழ்ச்சியில் தானாம் பார்தவர்களாம் என அங்கு போனவர்கள் சொல்லுகிறார்கள். நிறைய ஆம்பிளைகளையும் கைவிலங்கு போட்டு பொலிசார் கொண்டு போனவங்களாம்.

மாப்பிளையும், பொம்பிளையும் போட்டிருந்த மாலைகளையும் கழட்டி எறிந்துவிட்டு காரில் ஏறி போய் விட்டார்களாம். நல்ல காலம் இந்த சண்டை கல்யாணவீட்டு நிகழ்ச்சி இடையில் நடக்கும் போது தொடங்கியிருக்கிறது. அல்லாவிட்டால் மொய் கொடுக்கிற கட்டத்தில் நடந்திருந்தால் யாராவது மொய்பெட்டியை அடித்துகொண்டு போயிருப்பாங்கள்.

அந்த நிகழ்சியில் கலந்துகொண்ட சில ஊர்காரர்களை நாம் விசாரித்த போது தெரிந்து கொண்டவைகள்….

புங்குடுதீவு மக்கள் சுவிஸில் நிறையபேர் வாழ்கிறார்;கள். 30வருடத்தில் எத்தனையோ ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் எங்கள் ஊர்காரர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்பொழுதும், ஒவ்வொரு சனி, ஞாயிற்று கிழமைகளிலும் தவறாமல் புங்குடுதீவு மக்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்றுதான் முதல்முதலாக இப்படியொரு சண்டையை பார்தோம் என்கிறார்கள். ஆண்கள் யாராவது சண்டை பிடித்திருந்தால் அவர்களை நாங்கள் மண்டபத்துக்கு வெளியில் கொண்டுபோய் விட்டிருப்போம். இந்த நாகரிக வளர்ச்சியடையாத, படிப்பறிவில்லாத சிலபெண்கள் சண்டை பிடித்ததால் தான் இவ்வளவுதூரம் பிரச்சினை வந்தது.

பாருங்கள்! எவ்வளவோ காசு செலவழித்து, அழைப்பிதல் அடித்து, ஊருக்கு எல்லாம் ‘காட்” கொடுத்து, எவ்வளவோ ஒழுங்குகள் செய்து கல்யாணம் செய்வது என்பது வாழ்வில் ஒருமுறை தான். இந்த சுவிஸ் நாட்டில் இருந்து இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த சம்பவத்தால் முழு புங்குடுதீவு மக்களுக்கும் அவமானம் என அங்கு நின்ற பலர் பேசி கொண்டிருந்தார்கள்.

இமயமலையில் நித்யானந்தா........

தியான பீடம் மற்றும் அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு உலகின் பல பகுதிகளில் தியான பீடம் நடத்தி வந்தவர் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் டி.வி. மற்றும் பத்திரிகைகளில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. தியான பீடத்தில் சீடராக இருந்த லெனின் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் நித்யானந்தா மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்தது கர்நாடகாவில் என்பதால் வழக்குகளை அந்த மாநில போலீசுக்கு மாற்றினர்.

இந்த வழக்கை கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் சேலம் வந்து லெனினின் சொந்த ஊரில் விசாரணை நடத்திவிட்டு சென்றனர். இதற்கிடையே, கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

வீடியோ காட்சிகள் வெளிவந்த பிறகு நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் உள்ளது. அவ்வப்போது வீடியோ மூலம் சில விளக்கங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தியான பீடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறக்கட்டளைகளின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக நித்யானந்தா நேற்று திடீரென அறிவித்தார். இது தொடர்பாக தனது உரையை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:

தியான பீடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் என்ற முறையில் என்னைப் பற்றி கடந்த 3 வாரங்களாக வெளிவந்த செய்திகள் குறித்து இந்து தர்மத்தின் மதிப்புமிக்க ஆச்சாரியார்களில் சிலரை ஹரித்துவாரில் சந்தித்து பேசினேன். நடந்த உண்மைகளை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அவர்களது ஆன்மீக மற்றும் தார்மீக வழிகாட்டுதலை ஏற்று, தியான பீடத்தின் எதிர்காலம் குறித்த அவர்களின் கருத்துகளின்படி முழுமையாக நடப்பேன்.

தனிமையில் எனது ஆன்மீக வாழ்வை வாழ முடிவு செய்துள்ளேன். இந்த முடிவை ஆச்சாரியார்களும் ஏற்றுக் கொண்டனர். தேவைப்படும் சில மாற்றங்களோடு தியான பீடம் தொடர்ந்து செயல்படும். அதற்காக பீடத்தின் தலைமை பொறுப்பில் இருந்தும், அதைச் சார்ந்த மற்ற அமைப்புகளில் வகித்த பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.

தியான பீடத்தைச் சேர்ந்த, சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட சாதகர்களைக் கொண்ட ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்படும். அந்தக் குழு, இனி தியான பீடத்தை நடத்தும். புதிதாக நிர்வகிக்கப்படும் அமைப்புக்கு வழிகாட்டும்படி ஆச்சாரியர்களை கேட்டுக்கொண்டேன். அவர்களது கருத்துகளை பெற்று அதன்படி செயல்படுமாறு புதிய நிர்வாகிகளையும் கேட்டுக் கொண்டேன். கடந்த 10 ஆண்டுகளாகவும், அதற்கு முன்னதாகவும் எனக்கு பரிச்சயமான, என்னுடைய வழிகாட்டுதலை பெற்ற அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீட்சை பெற்ற ஆன்மீக சாதகங்களில் தொடர்ந்து ஈடுபடுமாறு அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தேவைப்படுமானால், மீண்டும் திரும்பி வந்து எல்லாவற்றையும் திறந்த இதயத்தோடும், தூய ஆத்மாவோடும் இணக்கமான சூழ்நிலையில் விளக்குவேன். இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளார். இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு, கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சென்னை போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் ஆங்கில மற்றும் கன்னட மொழிபெயர்ப்பை சிஐடி சூப்பிரண்டு யோகப்பா சமர்ப்பித்தார். கோர்ட்டில் அவர் கூறுகையில், ‘‘நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 2 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நித்யானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. ஆவணங்களை மொழி பெயர்த்ததை தவிர, இந்த வழக்கில் வேறு முன்னேற்றம் எதுவும் இல்லை’’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி அரளி நாகராஜ், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 6&ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு தொடர்பாக நித்யானந்தா தனது ஆட்சேபணையை தாக்கல் செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கினார்.
தியான பீட தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Wednesday, March 24, 2010

Tamil mass brawl at wedding Aarau - four injured

At a Tamil wedding ceremony took place on Sunday in Aarau to a mass brawl. Several fighting cocks, first among the 200 guests came to each other verbally, after which the conflict degenerated into a brawl. Four people were injured.

Aarau. - During the brawl and batons were used as the Aargau canton police revealed. Four people had to part with moderate injuries are taken to Cantonal Hospital of Aarau.

Several patrols of the Canton Police Department and the city of Aarau police had to be mobilized to bring the situation under control. The circumstances of the brawl is not yet clear. The police even questioned in the evening several people. The district office Aarau set a 44-year-old man in custody.

Saturday, March 20, 2010

திரைப்பட விருதுகள் 2009


சிறந்த திரைப்படம் - வெண்ணிலா கபடி குழு
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த இயக்குநர் - பாலா [நான் கடவுள்]
சிறந்த திரைக்கதை - சுசீந்தரன் [வெண்ணிலா கபடி குழு]
சிறந்த வசனம் - சுபா [அயன்]
சிறந்த கதை - நீரஜ் பாண்டே [உன்னைப் போல் ஒருவன்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த பிண்ணனி இசை - இளையராஜா [பழசிராஜா]
சிறந்த ஒளிப்பதிவு - மனோஜ் பரம்ஹம்சா [ஈரம்]
சிறந்த படத்தொகுப்பு - ஆன்டணி [அயன்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த கலை இயக்கம் - வைரபாலன் [பொக்கிஷம்]
சிறந்த ஆடை வடிவமைப்பு - சைதன்யா ராவ் [கந்தசாமி]
சிறந்த ஒப்பனை - [நான் கடவுள்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த ஒலிப்பதிவு - ரெசூல் பூக்குட்டி [பழசிராஜா]
சிறந்த Visual Effects & Graphics - Movin Stilz [கந்தசாமி]
சிறந்த Titles - [யாவரும் நலம்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த சண்டை அமைப்பு - ஸ்டன் சிவா [நான் கடவுள்]
சிறந்த நடன இயக்கம் - [வில்லு]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த பாடல் இசை - ஸ்ருதிஹாசன் [உன்னைப் போல் ஒருவன்]
சிறந்த பாடல் ஆசிரியர் - விவேகா [ஈரம்]
சிறந்த பிண்ணனி பாடகர் - டி.வேல்முருகன் [நாடோடிகள் - ஆடுங்கடா...]
சிறந்த பிண்ணனி பாடகி - நித்யஸ்ரீ [ஆனந்ததாண்டவம் - கனாக்காண்கிறேன்...]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த நடிகர் - மம்முட்டி [பழசிராஜா]
சிறந்த நடிகை - சினேகா [அச்சமுண்டு! அச்சமுண்டு!]
சிறந்த துணை நடிகர் - மோகன்லால் [உன்னைப் போல் ஒருவன்]
சிறந்த துணை நடிகை - பத்மப்ரியா [பழசிராஜா]
சிறந்த குணச்சித்திர‌ நடிகர் - பிரபு [அயன்]
சிறந்த குணச்சித்திர‌ நடிகை - ரேணுகா [அயன்]
சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் [நான் கடவுள்]
சிறந்த நகைச்சுவை நடிகர் - சிங்கம்புலி [மாயாண்டி குடும்பத்தார்]
சிறந்த குழந்தை நடிகர் - அக்ஷயா தினேஷ் [அச்சமுண்டு! அச்சமுண்டு!]
-----------------------------------------------------------------------------------------------------
சூப்பர் ஸ்டார் - சூர்யா
கனவுக்கன்னி - தமன்னா
மக்கள் படம் - அயன்

தர மறுத்தால் மகிந்தவுக்கு தலையிடி வரும் - சம்பந்தன்

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையினை ஏற்றுக்கொண்டு தீர்வினை வழங்க மறுத்தால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தும் பல இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கியும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளை தடுப்புகளில் அடைத்தும் கொரூரம் புரிந்தது தற்போதைய ஆளும் கட்சி அரசு. தமிழ் மக்கள் தொடர்பிலான எந்தவித ஈவிரக்கமும் அற்றுச் செயற்பட்ட ஆளும் கட்சிக்கு தமிழ் பேசும் மக்கள் எவரும் வாக்களிக்கக் கூடாது அவ்வாறு வாக்களித்தால் அது தற்கொலைக்கு ஒப்பானது என்றும் தெரிவித்த இரா சம்பந்தன் மானமுள்ள தமிழ் மக்கள் எவரும் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்க மாட்டார்கள். ஆளும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதானது மீண்டுமொரு பாரிய அழிவினை நோக்கியே தமிழர்களைக் கொண்டு செல்லும் செயற்பாடாகவே அமையும் என்று தெரிவித்த இரா சம்பந்தனிடம்,

மகிந்த தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட எந்தவிடயத்தினையும் தமிழ் கட்சிகள் கோரக்கூடாது என்று தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கேட்கப்பட்டபோது,

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து திடமான வெற்றியைக் கொடுத்தால் அதுதான் தமிழ் மக்களுக்கான ஜனநாயமான வெற்றியாக அமையும். அந்த முடிவினை அரச தலைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

மக்களினுடைய முடிவினை மக்கள் ஜனநாயக ரீதியில் வழங்குகின்றபோது அந்த முடிவிற்கு ஏற்ப ஜனநாயக அடிப்படையில் ஒரு தீர்வு அமையவேண்டும். பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தான் இலங்கையில் ஆட்சி நடைபெறுகின்றது. சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமையினை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த நிலையில் இருந்து அரச தலைவர் விலகுவாராக இருந்தால் இதனது விளைவுகள் வேறுவிதமாக அமையலாம் என்றும் இரா சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் மகிந்தராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ்பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் இன்றைக்கு இருக்கக்கூடிய சர்வதேச சூழ்நிலை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும். சர்வதேச நாடுகள் எம்மை நிராகரிக்க முடியாது. சிறீலங்கா அரசாங்கத்திற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அரச தலைவர் சொல்லியிருக்கலாம். ஆனால் அரச தலைவர் சொல்லுகின்ற கருத்துக்கள் முடிவானவை அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் அதிகபடியான வாக்குகளை பெற்று தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் போது தமிழ் மக்கள் ஒரு ஆணையோடு எம்மை அனுப்பினார்கள் என்கின்ற பாரிய செய்தி முன்வைக்கப்படும்.

அவர்களுக்கு என்ன தேவை என்பதை முன்னிலைப்படுத்தியே மக்கள் எம்மை பாராளுமன்றம் அனுப்புவார்கள். ஆகவே அந்த வகையில் அனுப்பப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் முன் அழுத்தமான கோரிக்கைகளை முன்வைக்கும்.

அந்த வேளை எமக்கான தீர்விற்கான நடவடிக்கைகளை சர்வதேசம் மேற்கொள்ளும் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். என்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், மாவை. சேனாதிராசா, சுரேஸ்பிறேமச்சந்திரன், சி.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட வேட்பாளர்கள் பங்குகொண்டனர்.

ரம்பாவை திருமணம் செய்யும் இலங்கை தமிழர்


நடிகை ரம்பாவுக்கும் தொழிலதிபர் இந்திரனுக்கும் வரும் ஏப்ரல் 8-ம் தேதி திருப்பதி திருமலையில் திருமணம் நடக்கிறது. சென்னையில் ஏப்ரல் 11-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

பிரபல நடிகை ரம்பா மேஜிக்வுட்ஸ் எனும் கனடா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமானார். அப்போது அவருக்கும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும் காதல் ஏற்பட்டது. இந்திரன் ரூ 2000 கோடி மதிப்புள்ள நிறுவனத்துக்கு சொந்தக்காரர். முக்கியமாக இலங்கைத் தமிழர்.

இந்த காதலுக்கு ரம்பாவின் தரப்பில் முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரம்பா- இந்திரன், திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் சென்னையில் நடந்தது.

திருமண தேதியை தற்போது முடிவு செய்து அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கிறது. திருமண அழைப்பிதழ் விநியோகம் நடந்து வருகிறது.நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். திருமண வரவேற்பு சென்னையில் 11-ந்தேதி நடக்கிறது.

Sunday, March 14, 2010

இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது - அமெரிக்கா


ஊடகவியலாளர்கள் அரசாங்க விரோதச் செயல்களில் ஈடுபடுவதாக அரசாங்கத்தின் உயரதிகாரிகள் குற்றம் சுமத்தி வருவகின்றனர்..

மேலும் அரசாங்கத்திற்கு ஆதரவான வகையில் செய்திகளை வெளியிடுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. விமர்சனப் பாங்கான கருத்துக்களை வெளியிடுவதில் ஊடகங்கள் சிக்கல் நிலைமையை எதிர்நோக்கி வருகின்றன.

எவ்வாறெனினும், யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் சில சாதகமான மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

யுத்த காலத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் வெகுவாக பதிவாகியிருந்த போதிலும், தற்போது அந்த எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் பயன்படுத்தப்பட்டு வந்த சிறுவர் போராளிகள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டிடயுள்ளது.

சுதந்திர ஊடகவியலாளர் மகிந்த ரத்னாயக்கவை கடத்த முயற்சி

வெள்ளை வேனில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் சுதந்திர ஊடகவியலாளர் மகிந்த ரத்னாயக்கவை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் நேற்று மாலை தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிச் செல்லும்போதே அவர் இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார். மகிந்த ரத்னாயக்க சிறப்பு அரசியல் கட்டுரையாளர் என்பதுடன் லங்கா டிசென்ட் இணையத்தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

அத்துடன், மங்கள சமரவீர தலைமையிலான எமது தேசிய முன்னணியின் செயற்பாட்டு ரீதியான உறுப்பினராக்கவுமிருந்துவருகிர்றார். இம்முறை பொதுத் தேர்தலில் 18 மாவட்டங்களில் போட்டியிடும் எமது தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளராகவும் மகிந்த ராத்னாயக்கவை பெயரிட்டுள்ளது. தேர்தல் ஆணையாளருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கட்சியின் பிரதிநிதியாக அவர் கலந்துகொண்டுள்ளார்.

பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு முச்சக்கர வண்டியொன்றில் கட்சி அலுவலகத்திற்குத் திரும்பிகொண்டிருந்த போது வெள்ளை வானில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் முச்சக்கர வண்டிக்குக் குறுக்கே வாகனத்தை நிறுத்தியதுடன் அதில் ரத்னாயக்கவைப் பலவந்தமாக ஏற்ற முயற்சித்துள்ளனர்.

இதன்போது அருகில் இருந்தவர்கள் தலையிட்டதாலும், முச்சக்கர வண்டி சாரதியின் திறமையின் காரணமாகவும் அவர் ஆபத்திலிருந்து தப்பியுள்ளார். எமது தேசிய முன்னணியின் மேலும் இரண்டு அதிகாரிகள் கடந்த வாரத்தில் அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்ல முயற்சித்ததாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

வடக்கில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் சுயதணிக்கை

வடபகுதி மக்களினதும் தமதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என யாழ்ப்பாண பத்திரிகை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கிலிருந்து சென்ற ஊடகவியலாளர் குழுவொன்றுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் கோனார் மயில்நாதன் தற்போதைய யாழ்ப்பாண நகரத்திற்குள் காணப்படுவது விசித்திரம் மாத்திரமே, கிராமப்புறங்களில் இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கிறது என்ற முடிவுக்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறும் நடைமுறை தொடர்ந்தும் இருப்பதாகவும் இது யாழ்ப்பாண மக்களின் கருத்து கூறும் சுதந்திரத்தையும், தகவல் அறியும் உரிமைக்கும் பாரிய தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கின் வசந்தத்தின் மூலம் வடபகுதிக்கு எவ்வித அபிவிருத்தியும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாண பத்திரிகை ஆசிரியர்கள் தொடர்ந்தும் கருத்துக்களை வெளியிட முடியாது சுய தணிக்கைக்குள் சிக்கியிருப்பதாகவும் மயில் நாதன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடபகுதி மக்களுக்கும் அடிப்படையாகத் தேவைப்படுவது சுதந்திரமும், தமது கலாசாரத்தின்படி வாழ்வதற்கான உரிமைகளே அன்றி தேர்தலுக்குத் தேர்தல் அரசியல்வாதிகளைத் தெரிவுசெய்யும் உரிமையல்ல என வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் விஜேசுந்தரம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, March 10, 2010

இரண்டு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

த நேசன் பத்திரிகைகளின் பாதுகாப்புச் செய்தியாளரான ருவான் வீரகோன் மற்றும் சியத்த பத்திரிகையின் ஆசிரியர் பிரசன்ன பொன்சேக்கா ஆகியோரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் வெகு நீண்டகாலமாக ஜெனரல் சரத் பொன்சேக்காவுடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளதால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என பயங்கரவாத விசாரணைப் பிரிவின் மூத்த அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
ருவன் வீரகோன் மாத்திரமல்லாது பிரசன்ன பொன்சேக்காவும் மாவிலாற்றில் ஆரம்பமான நான்காவது ஈழ யுத்தம் நிறைவடையும் வரை போர்க் களத்திலிருந்து செய்திகளை வெளியிட்டுவந்த ஊடகவியலாளர்களாவர்.

பிரசன்ன பொன்சேக்கா அப்போது லேக் அவுஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படும் சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். இதனைத் தவிர, ஜெனரல் சரத் பொன்சேக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த மேலும் சில ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Monday, March 1, 2010

தமக்கு எதிராக உலகம்: சிறுபான்மை மனோநிலையில் சிங்கள இனம்

ஆசியாவின் அழகிய தீவுகளில் ஒன்றான சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் 80,000 மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தது இனப் பகை, வன்முறை மற்றும் முட்டாள்தனமான தேசப்பற்று வெறி என்பனவாகும்.

அவற்றின் கடைசிப் பொறியையும் அணைத்து விடுவதற்கு இப்போது கிடைத்துள்ளது போன்ற ஒரு சந்தர்ப்பம், அந்த நாட்டின் 62 வருட கால சுதந்திரத்தில் எப்போதுமே கிடைத்ததில்லை.

விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து சிங்கள வெற்றி எக்களிப்பு அலையால் கடந்த தை மாதத்தில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் ஒரு குடியரசு அதிபர்.

அவர் தன்னிச்சைப்படி நடப்பது மேலும் மேலும் அதிகரித்தால், மொத்த சிறிலங்கா மக்களுக்கும் துன்பத்தைத் தரக்கூடிய வகையில் - இந்த அருமையான சந்தர்ப்பம் வீணே கடந்து செல்ல உறுதியாக அனுமதிக்கப்படும்.

இத்தகைய செயல், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இடையிலான நிலையான அமைதியை மட்டும் ஆட்டம் காண வைக்காமல் நாட்டின் பல கட்சி மக்களாட்சி முறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு எழுதியுள்ளார் அமெரிக்காவின் மிகப் பழமை வாய்ந்த The Nation ஏட்டின் ஐ. நா. வுக்கான செய்தியாளரும், New York Times ஏட்டின் ஐ.நா.வுக்கான ஆசியச் செய்திப்பிரிவி்ன் முன்னாள் தலைமையாளருமான Barbara Crossette. அதனைப் புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் ரி. ரேணுபிறேம்.

Barbara Crossette மேலும் எழுதியுள்ளதாவது:

இந்தியாவின் கரையோரத்தில் ஒப்பீட்டளவில் சிறியதான, 21.3 மில்லியன் மக்களைக் கொண்ட சிறிலங்காத் தீவு வேறு எங்கும் இல்லாதவாறு முறையற்ற அரசாட்சி ஒன்றுக்குள் ஏன் விழுந்தது?

இது, சிம்பாப்வே அல்லது பொஸ்னியா அல்லது ஹெய்டி அல்ல; இதுவரைக்கும் அப்படி இல்லை. ஆனால், காலனித்துவத்திற்குப் பின்னான உலகின் வீழ்ச்சிகளில் புதியதொரு உதாரணம் இது. கென்யா மற்றொரு உதாரணம். இது ஒரு குறிப்பிடத்தக்க பயனுள்ள படிப்பினை.

மனித மேம்பாட்டு நடவடிக்கைப் படி தெற்காசியவிலேயே மிகவும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்று சிறிலங்கா. அதன் அயல் நாடுகளான பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்றவற்றிலும் பார்க்க படிப்பறிவு, கல்வி மட்டம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் இன்னும் அது உயரத்திலேயே இருக்கிறது.

அந்த நாட்டுக்கு வெளியிலிருந்து எதிரிகள் யாரும் கிடையாது. பெண்கள் தசாப்தங்களாக உயர் பதவிகளை வகித்து வருகிறார்கள். உயிர்ப்புடனான ஊடகத்துறை அங்கு இருக்கிறது. இரு கட்சி ஆட்சி முறைமை இருக்கிறது. மதிப்பு மிக்க குடும்பங்களில் இருந்து வருபவர்களே அக் கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

இப்போது, பத்திரிகையாளர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள், கொல்லப்பட்டுள்ளார்கள், காணாமல் போயுள்ளார்கள் அல்லது தப்பி வெளியேறி விட்டார்கள். நிலைமைகளை மேலும் அச்சுறுத்தக் கூடிய வகையில் தன்னையே தகவல்துறை அமைச்சராக குடியரசு அதிபர் பெயரிட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைய குடியரசு அதிபருக்கு தேர்தலில் சவால் விட்ட எதிர்க் கட்சிகளின் ஒன்றிணைந்த வேட்பாளர் இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை எந்த அடிப்படைக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை.

தமிழர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்க் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தார்கள். இப்போது அதற்கான எதிர்வினையை எண்ணி அச்சத்துடன் காத்திருக்கிறார்கள்.

கடந்த வருடத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதற்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதற்குமான அனைத்துப் பெருமைகளும் தனக்கே சேர வேண்டும் என்று குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்புகிறார்.

நாட்டை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றிய தலைவருக்கு, மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட சிங்கள மக்கள் வாக்குகளைப் பரிசளித்ததன் மூலம், தனது எதிராளியும் போர்த் தளபதியுமான சரத் பொன்சேகாவை தீர்க்கமாகத் தோற்கடித்தார் ராஜபக்ச.

புலிகள் படை பெரும் ஆயுத இயக்கமாக இருந்தது எனினும் சிறிலங்காவிற்கு வெளியே எப்போதுமே அனுதாபத்தைப் பெற்றிருக்கவில்லை. புலிகளின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் சண்டையும் அடக்குமுறைகளும் முடிவுக்கு வந்துள்ளதை வரவேற்கிறார்கள்.

போருக்கு ஆதரவளிப்பதற்காக பணம் கொடுக்குமாறு தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் கூறுகிறார்கள். அது இப்போதும் தொடருகின்றது.

வெளிநாட்டுத் தமிழர் மத்தியில் புலிகள் செய்த பரப்புரைகளில் சொல்லப்பட்ட கருத்தாக்கங்களில் ஓரளவிற்கு மேல் எப்போதுமே உண்மைகள் இருந்ததில்லை.

சிறிலங்காவின் வடக்கிலும், மத்திய மலைநாட்டுத் தேயிலைத் தோட்டங்களிலும் வாழும் - போராளிகளுடன் ஒருபோதும் இணைந்திராத - தமிழர்களுக்கு கூட, தமது அரசியல் உரிமைகள் தொடர்பாக மோசமான மனக் குறைகள் இருந்தன. அவை இன்னமும் இருக்கின்றன.

தமிழர்களின் உயர்வான கல்வி நிலை மற்றும் மொழித் திறன் காரணமாக பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகள் அவர்கள் பால் காட்டிய ஆதரவு, சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தொடர்பான ஆத்திரத்தை கிளப்பி விட்டது.

1956இல் அப்போதைய பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா, தேசப்பற்று வெறிக் கொள்கையைப் பற்றிப் பிடித்தார். அது சிங்களத்தை மட்டுமே தேசிய மொழியாக்கியதுடன் சிங்களப் பெரும்பான்மையினரின் பெளத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுத்தது.

அந்த விடயத்தில் பிரதமர் போதிய அளவிற்குச் செயற்படவில்லை என்று கருதியே ஆத்திரம் கொண்ட பிக்கு ஒருவரால் மூன்று வருடங்கள் கழித்து பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டார். அந்த அளவுக்கு அங்கு சிங்கள இனவெறி தலைதூக்கி இருந்தது.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தினர் தாக்கப்பட்டனர்; நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்; அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அதனால் தாங்கள் ஒதுக்கப்பட்டதான ஒரு உணர்வு தமிழர்கள் மத்தியில் பெருமளவில் பரவ ஆரம்பித்தது; அது தொடர்ந்தது; விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்ட போதும் - தாம் அடக்கப்படுவதான தமிழரின் உணர்வு இன்னமும் அப்பயே தான் இருக்கின்றது.

இத்தகைய பின்னணியில், நிலையான அமைதியை ஏற்படுத்த வேண்டுமானால், வெற்றி மிதப்பில் இருக்கும் சிங்கள அரசு தமிழர்களை நோக்கிப் பெருந்தன்மையுடன் தனது கரங்களை நீட்ட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

தமிழர்களின் கலாசார மற்றும் வரலாற்று தலைநகரான யாழ்ப்பாணம் சிறிலங்காப் படைகளால் வரன்முறைகளற்று சேதமாக்கப்பட்டுள்ளது. அதனைப் பொருளாதார ரீதியில் மீளக்கட்டி எழுப்புவதுடன், அங்கு வாழும் மக்களின் உள உறுதியையும் பலப்படுத்த வேண்டி உள்ளது.

போரின் பின்னர் கடந்த இளவேனில் காலத்தில் உருவாக்கப்பட்ட, அடிப்படை வசதிகளற்ற தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய தமிழ்க் குடும்பங்கள் பல மாதங்கள் கடந்து விட்ட போதும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

உலக வங்கியும் ஐக்கிய நாடுகள் சபையும் உதவிகளை வழங்குகின்றன எனினும் அவை எப்போதாவது தான் கிடைக்கின்றன. இது ஏற்றுக் கொள்வதற்குக் கசப்பானதாக இருக்கின்றது எனச் சொல்கிறார்கள் சில அனைத்துலக உதவிக் குழுக்களின் பணியாளர்கள்.

வெளி உலகு தமக்கு எதிராகவே செயற்படுகின்றது என்று சிங்களவர்கள் ஆதாரங்களுடன் நம்புகின்றார்கள். சிறிலங்கா எழுத்தாளர் ஒருவர் இதனை “சிறுபான்மைத் தாழ்வு மனப்பான்மையுடனான ஒரு பெரும்பான்மை இனம்” என என்னிடம் வர்ணித்தார்.