Monday, December 21, 2009

தனிப்பட்ட கருத்தை மின்மடல் ஒன்றில் பரிமாறியதற்காக தமிழ் வைத்தியர் பணிநீக்கம்

மின்மடல் ஒன்றில் தனிப்பட்ட கருத்தைப் பரிமாறியதற்காக முரளி வல்லிப்புரநாதன் என்ற வைத்தியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சக சிங்கள வைத்தியரான கிரிஷாந்தா அபயசேனா முரளி வல்லிப்புரநாதனுக்கு அவசரம் என்று குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்திருக்கின்றார். அதில் இலங்கையில் பன்னாட்டுச் சமூகத்தின் தலையீடு தேவையா என்று கேட்டு அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சி ஒரு கருத்துக் கணிப்பு நடத்திவருகிறது எனக் குறிப்பிட்டு அதில் பங்கேற்பு தேவையில்லை என்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கு, முரளி எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பாதுகாப்பு மருத்துவ சேவை என்ற பெயரில் (வன்னி) முகாம்களில் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமானமற்று நடத்தப்படுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கச் சொல்கிறீர்களா? இதுகுறித்து வெளிப்படையாகவும் இனவெறியற்றும் விவாதிக்க நமக்கு (மருத்துவர்களுக்கு) இதுதான் சரியான நேரம் என்று கருதுகிறேன். அங்கு என்ன நடக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுபற்றி ஏதும் அறிந்திருக்கவில்லையெனில் சேனல் 4ஐப் பார்த்து உங்களை விவரப்படுத்திக் கொள்ளுங்கள். எதுவாயினும் சிஎன்என் கருத்துக் கணிப்பில் நாம் வாக்களிப்பதன் மூலம் பன்னாட்டுச் சமூகம் உடனே தலையிட்டுவிடப் போவதில்லை. உங்களுடைய பதிலை (வெள்ளை வேனை அல்ல) எதிர்ப்பார்க்கிறேன் என்று பதில் அனுப்பியிருக்கின்றார்.

சில நாட்கள் கழித்து உங்களுடைய மின்னஞ்சல் பதில் மூலம் சிறிலங்கா அரசிற்கு அவப் பெயர் ஏற்படுத்தியுள்ளது நாங்கள் நடத்திய பூர்வாங்க விசாரணையில் தெரிவந்துள்ளது. அதனடிப்படையில் நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள். உங்கள் மீதான குற்றச்சாற்று மீது முழு விசாரணை நடைபெறும். என்று தெரிவித்து சுகாதார அமைச்சு செயலாளரின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று முரளிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

பணிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அனைவருக்கும் முரளி அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சக மருத்துவர் அபயசேனா அனுப்பியிருந்த மின்னஞ்சலிற்கு தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்திருந்தேன். அது எனது அடிப்படை உரிமை. அதற்கும் எனது அரசு பணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் எந்த விசாரணையும் இன்றி என்னை பணி நீக்கம் செய்துள்ளனர். போர் முடிந்த பிறகு சிறுபான்மையினரிடம் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவோம் என்று கூறியிருந்தார்களே அதற்கான சிறந்த வழி இதுதானா? என்று கேள்வியெழுப்பியிருக்கின்றார்.

கிரிஷாந்த அபயசேகரவின் மடல்

From: Dr. Chrishantha Abeysena <***************@mfac.kln.ac.lk>
Subject: Fw: urgent

The CNN web site and the TV are now conducting a voteon , "Should the International Community intervene in Sri Lanka ”?Pl click the linkbelow and say no.

Also Please forward this mail to all your friends asking them to do the same.

http://internationaldesk.blogs.cnn.com/category/i-desk-poll/

Thank you very much.

முரளி அவர்களது பதில் மடல்

From: drmurali_1999@yahoo.com
Subject: Re: Fw: urgent

Dear Dr.Abeysena,
What do you want us to do? Observe silently the inhuman treatment taking place at the Forced Detention Camps (FDC) under the name of provision of health services and security? I think this is time for us (the medical professionals) to discuss this more openly without any racial feelings. I hope you are aware of what is realy happening at the FDC if not please watch the channel 4 and enlighten yourself.
Click here
Anyway IC will not interfere just because somebody vote at CNN.
Await you kind response (except the white van reaction)
Thank you
முரளி

மூலம் : இயங்குவெளி

No comments:

Post a Comment