சிறிலங்காவின் ஜனாதிபதியின் குடும்ப அரசியலில் மலிந்து போயுள்ள லஞ்ச ஊழல் இப்போ வெளிப்படையாகத் தெரியவருகிறது. அரச மேல் மட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதால், நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் அது மலிந்து போயுள்ளதாகத் தெரிய வருகிறது.
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தங்கவைக்கபட்டிருக்கும் வன்னி மக்களுக்கான உணவு விநியோகம் மகிந்தவின் முக்கிய புள்ளிகளின் மிகப்பெரிய வியாபாரமாக மாறியிருப்பது ஏற்கனவே செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே விடயத்தை நேற்று ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த காமினி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் தடுப்பு முகாம்களிலுள்ள மக்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு முட்டைக்குக்கூட கப்பம் வாங்கப்படுவதாகவும், இந்த கப்பம் வாங்கும் விவகாரம் முட்டையில் தொடங்கி அனைத்துப் பங்கீட்டுப் பொருட்களிலும் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்று, அண்மையில் திறக்கப்பட்ட ஏ-9 வீதியால் பயணம் செய்யும் ஒவ்வொரு வாகனத்திற்கும் 50 ரூபா வீதம் அறவிடுவதற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இந்தப் பணம் எங்கே செர்கின்றது என்பது, மகிந்தவின் ஆட்களுக்கே வெளிச்சம் எனவும் அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வன்னி நிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, A9 பாதையால் பயணிப்போரிடத்தில் கப்பம் அறவிடப்படுவது தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டது. இப்போது அரச தரப்பின் ஊழல் பெருச்சாளிகள் அறவிடும் கப்பம் பற்றி யாரும் பேசாதிருப்பது ஏன்..
பயமா? பங்கா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment