Sunday, November 15, 2009

வன்னிக் காட்டில் கனரக ஆயுதம் தாங்கிய புலிகள்

கடுமையான மற்றும் கனரக ஆயுதங்கள் தாங்கிய விடுதலைப் புலிகள் இன்னமும் வன்னிக் காடுகளில் உலவுவதாக நியூஸ் X செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் நியூஸ் X எனப்படும் செய்திச் சேவையின் நிருபரை , இலங்கை இராணுவத்தினர் முதன் முதலாக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் அப்பகுதிக்கு முதல் முதலாகச் சென்ற வெளிநாட்டு நிருபர் இவராவார். நியூஸ் X செய்திச்சேவை , இலங்கை அரச சார்பான ஒரு செய்திச் சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இருந்து வவுனியா சென்ற நிருபரை, வவுனியாவில் இருந்து MI- 24 ரக உலங்கு வானூர்தி முல்லைத்தீவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. வவுனியாவில் இருந்து புறப்பட்ட இந்த உலங்கு வானூர்த்தி தாழ்வாகவும், மிகவும் வேகமாகவும் பறந்து சென்றதாகக் கூறும் இந்த நிருபர், அடர்ந்த வன்னிக் காடுகளில் விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்கள் கனரக ஆயுதங்களுடன் இன்னமும் உலாவிவருவதாக வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார். இவர்களைத் தேடி அளிக்க பல மாதங்கள் ஆகலாம் என இராணுவத்தினர் தெரிவித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டுவிட்டது என்ற ஒரு செய்தியை புலம்பெயர் மக்களுக்கு பரப்புரையாக மேற்கொள்ள இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்ட ஊடகமே இந்த நியூஸ் X ஆகும். இந்த காணொளி முழுவதும் ,வன்னியில் கொல்லப்பட்ட 25,000 மக்களைப் பற்றி எதுவும் கூறாது, அங்கு நடந்த மனிதப்பேரவலைத்தை, விவரிக்காது மற்றும் புதை குளிகளைப் பற்றிப் பேசாது, விடுதலைப் புலிகள் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டார்கள் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இலங்கை இராணுவம் தாம் முல்லைத்தீவு பொது வைத்தியசலையை சரமாரியாகத் தாக்கியதாகவும் ஒப்புக்கொள்கிறது, இருப்பினும் அங்கு விடுதலைப் புலிகள் இருந்ததால் தாக்கினோம் என நியாப்படுத்த முயல்கின்றனர்.

இறுதிக்கட்டப் போரின் போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலை சிறிலங்கா அரசின் செல்வீச்சால் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் வந்த போதும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்திருந்தது. பி.பி.சி, சி.என்.என் மற்றும் அல்ஜசிரா போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு, தாம் அப்பகுதியில் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என இலங்கை அரசு அப்பட்டமான பொய் கூறியது. அதற்க்கு ஒருபடி மேல்போய் விடுதலைப் புலிகளே மருத்துவமனைகளை தாக்குகின்றனர் என்றார் கோத்தபாய.

அந்தப் பிராந்தியத்தில் வைத்தியசாலைகளே இல்லை என்றும் அது கூறியிருந்தது. புலம் பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்களும் அதனைப் புலிகளின் பிரச்சாரம் என்றே கூறி வந்தனர். எனினும் இந்த வீடியோவில் அது முழுமையாகச் செல்வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.

புலிகள் இப்பகுதியிலிருந்து முன்னேறி வந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியதாலேயே சிறிலங்கா அரசாங்கமும் வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தியதாக தமக்குச் சொல்லப்பட்டது என்கிறார் இந்த ஊடகவியலாளர். அவர் இராணுவ உயரதிகாரியை மேற்கோள் காட்டி குரிப்பிட்டுள்ளார்.

கோர வெறி பிடித்த சிங்கள அரசு, தற்போது புலம் பெயர் தமிழர்களைக் குறிவைத்து, அவர்கள் ஆதரவில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வெடித்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு தரம்கெட்ட ஊடகங்களைப் பயன்படுதிவருகின்றது.

No comments:

Post a Comment