ஜெனரல் சரத் பொன்சேக்கா ஜனாதிபதியானால் தன்னையும் ரணில் விக்ரமசிங்கவையும் 24 மணி நேரத்திற்குள் சிறையில் அடைத்துவிடுவார் எனவும் இந்த நிலைமையை நன்கு உணர்ந்து செயற்படுவது ஜனநாயக இருப்பிற்கு முக்கியமானது எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ இடைத்தரகர் ஒருவர் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளார். இந்த இடைத்தரகர், ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பட்ட நண்பராவார். ரணில் நேற்று வெளிநாடு செல்ல முன்னர் இந்தத் தகவலை அந்த நபர் வழங்கியுள்ளார்.
தன்னுடன் எவ்வாறான மோதல்கள் இருந்த போதிலும், சரத் பொன்சேக்காவிற்கு இராணுவ அரசாங்கமொன்றை அமைக்க இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி இடைத் தரகர் மூலம் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு எதிர்க்கட்சித்
தலைவர் நாடு திரும்பியதும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தும் எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். தற்போது நாட்டில் அமுல்படுத்தப்படுவது கொலைக்கார, சர்வாதிகார நிர்வாகம் இல்லையா என ஜனாதிபதியின் தகவலைத் தெரிவித்த நண்பரிடம் கேட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அழைப்பையும் நிராகரிக்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment