Friday, September 4, 2009

ராம் மற்றும் நகுலன் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட விடயம் வெளியிடப்படாததன் காரணமாக பிடிபட்ட கே.பி.

விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், தற்போது மலேசிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத்துறையின் ஒருங்கிணைந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலொன்றில் ஓகஸ்ட் 06ம் திகதி கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானது என தேசிய புலனாய்வுத்துறையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தகவல் தருகையில், ஷமலேசியா விசேடக் குழு| அதிகாரிகளே கே.பி.யைக் கைதுசெய்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் கூறினார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கே.பி. தற்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹேன்தா விதாரணவின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மலேசிய விசேடக் குழுவினால் கைதுசெய்யும் பாரிய திட்டத்திற்கு மலேசியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா பெரும் பங்கெடுப்பை மேற்கொண்டுள்ளார்.

மலேசியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் மலேசியாவில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரலாயத்திற்கு அனுப்பப்பட்ட மேஜர் ஜெனரல் உதய பெரேரா, தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளார்.

உதய பெரேரா மலேசியாவில் பணியமர்த்தப்பட்ட நாள் முதல், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கண்காணித்து அதுகுறித்து மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுப் பிரவினர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கே.பி. போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் மலேசியாவில் வாழ்வது, அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என உதய பெரேரா தொடர்ந்தும் மலேசிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையிலேயே கே.பி. குறித்து அதிகூடிய கவனம் செலுத்த மலேசிய விசேடக் குழு ஆரம்பித்துள்ளது.

அதன்பின்னர், கே.பியை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரச தலைவர் மட்டத்தில் மலேசிய தலைவர்களிடம் வேண்டுகோளொன்றை விடுக்குமாறு அதிகாரிகள் பிரதி உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், ஜூலை மாத இறுதியில், சிங்கப்ப+ரில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் விசேட கூட்டத்தின் போது, கே.பி.யை கைதுசெய்து இலங்கையிடம் கையளிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மலேசிய வெளிவிவகார அமைச்சரிடம் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இராஜதந்திர ரீதியாக இரு நாடுகளுக்குமிடையே இவ்வாறான இணக்கப்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கே.பி. மலேசியா சென்றிருந்ததை இலங்கையின் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் கே.பி. தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதன் மூலமே கே.பி மலேசியா சென்றமையை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட விடயம் வெளியிடப்படாததன் காரணமாக கே.பி.யும் இதுகுறித்து அறியாதிருந்துள்ளார். இதன் காரணமாகவே, கே.பி. இவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கே.பி.யின் செய்மதி தொலைபேசி இலக்கத்தைத் பெற்றுக்கொண்ட பாதுகாப்புத் தரப்பினர், இதுகுறித்து ஆராயுமாறு அமெரிக்க மற்றும் மலேசிய தொலைத்தொடர்பு நிபுணர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, கே.பி. செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி, மலேசியாவிலிருந்தே வழங்கப்பட்டதை ஆளுடீ அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இந்தத் தகவல்களுக்கமைய கே.பி. தங்கியிருந்த, மலேசிய தலைநகர் கோலாலம்ப+ரில் உள்ள ஷரிய+ன்| விடுதியை முற்றுகையிட்ட அதிகாரிகள், கே.பி.யின் சாரதி ஷஅப்பு|வை கைதுசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கே.பி. வேறிருவருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதற்கிடையே, ஆளுடீ அதிகாரிகள் ஷஅவசரமாக ஒருமுறை வெளியே வாருங்கள்| என ஷஅப்பு|வைப் பயன்படுத்தி கே.பி.யின் தொலைபேசிக்கு தகவலொன்றை வழங்கிப்பட்டதை அடுது;து விடுதியைவிட்டு வெளியே சென்ற கே.பி. கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த முற்றுகையின் போது எந்தவொரு இலங்கை பாதுகாப்பு அதிகாரியும் பங்கேற்கவில்லை. கே.பி. கைதுசெய்யப்பட்டதை அடுத்து அதிகாரிகள் இதுகுறித்து பிரதி உயர்ஸ்தானிகருக்கு தகவலளித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடியதன் பின்னர், தாய்லாந்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கே.பி.யை ஒப்படைப்பதென இணக்கம் காணப்பட்டது.

இதுதொடர்பாக தாய்லாந்து அரசாங்கத்திற்கு தகவலளித்துள்ள மலேசிய பாதுகாப்புத் தரப்பினர், இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் சந்தேக நபரொருவரை பாங்கொக் விமான நிலையத்தில் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளனர். குறித்த சந்தேக நபர் கே.பி. என தாய்லாந்து அரசாங்கத்திடம் இனங்காட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் இணக்கம் கண்டுள்ளனர்.

இதனடிப்படையில், ஓகஸ்ட் 6ம் திகதி, இலங்கை விமானப்படையினரால் பயன்படுத்தப்படும் விமானமொன்றின் மூலம் பாங்கொக் விமான நிலையத்திற்குச் சென்ற இலங்கையின் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலர் எவ்விதத் தடங்கல்களும் இன்றி கே.பி.யை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கே.பி.யிடம் தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்டதைப்போன்று கே.பி. ஒரு பெரிய தலைவர் அல்லவெனவும், அவர் அறிந்திருக்கும் தகவல்கள் வரையறையானவை எனவும் எமது இணையத்தளத்திற்கு தகவலளித்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Thursday, September 3, 2009

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை களமிறக்குவது தொடர்பாக ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை களமிறக்குவது தொடர்பாக ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைதுள்ளதாக ஜே.வி.பி.யின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியொருவரை வேட்பாளராக நிறுத்தாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என ஜே.வி.பி.யினால் உத்தியோகப+ர்வமற்ற வகையில் கிடைத்துள்ள யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைத்துவத்தின் இணக்கம் கிடைத்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் முன்னாள் சிவில் சேவை அதிகாரியொருவர் குறித்தும் தற்போது எதிர்க்கட்சிக் கூட்டமைப்பின் தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எண்ணியிருந்த கரு ஜயசூரிய, எஸ்.பீ.திஸாநாயக்க ஆகியோர் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. பிரதிநிதிகளுக்கிடையே இவ்வாறு உத்தியோகப+ர்வமற்ற பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.யி.னால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர்கள் மூன்று பேரில் யாரைத் தேர்தலில் களமிறக்குவது தொடர்பான தீர்க்கமான இணக்கம் வெளியிடப்படவில்லை.

Tuesday, September 1, 2009

தமிழ் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு?

20வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திஸ்ஸநாயகத்திற்குப் பொது மன்னிப்பு வழங்குமாறு வெளிவிகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக வெளிவிகார அமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (31) திஸ்ஸநாயகத்திற்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து வெளிவிவகார அமைச்சருக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணமுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன், இந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிகார அமைச்சிற்கு நூற்றுக்கணக்கான தொலைநகல்கள் (ஃபெக்ஸ்) வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

லிபியாவின் 40வது சுதந்திரத் தின விழாவில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர், திஸ்ஸநாயகம் வழக்கின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து விரவாக கலந்துரையாடியுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க வழிசெய்யுமாறு சர்வதேச அமைப்புக்கள் கோரியுள்ளமை குறித்து ஆராயப்படுவதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு இது வழிவகுக்கும் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.